அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Share

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலில் சென்றுள்ளது. டெல்லியை விட 3 மடங்கு பெரிதான அந்த பனிப்பாறை உடைந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு கூடங்களை அமைத்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. எனினும், மனிதனின் நவீன வாழ்வியல் முறைகளால், அதிகரிக்கும் தொழிற்சாலைகள், கரியமில வாயு வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து பலகடற்கரையோர பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே, உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸை எட்டினால் அன்டார்டிக்காவில் உள்ள மூன்றில் ஒரு பகுதிபனிப்பாறைகள் உடைந்துவிடும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பூமியின் வெப்பநிலை 1.02 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இந்நிலையில், அன்டார்டிக்காவில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்தது. வேடேல் கடலில் அமைந்திருந்த இந்தப் பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அதாவது டெல்லியை (1,484சதுர கி.மீ.) விட 3 மடங்கு பெரிய பனிப்பாறை இதுவாகும். புவி வெப்பமயமாதலே இந்தப் பனிப்பாறை உடைந்ததற்கு முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த பனிப்பாறைக்கு ஏ-76 (A-76) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பூமியில் தற்போது உள்ள பனிப்பாறைகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த பனிப்பாறை ஏற்கனவே வெடெல் கடலில் மிதக்கத் துவங்கி இருந்ததாகவும், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பருவநிலை மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும் இந்த ஏ-76 பனிப்பாறை இன்னும் சில காலத்தில் இது 2 அல்லது 3 துண்டுகளாக பிரிந்து சென்றுவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Share

Related posts

கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் மிரட்டப்படுகிறார்கள் – பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Udhaya Baskar

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் 1 – துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?

Udhaya Baskar

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது – முதலமைச்சர் உறுதி

Admin

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

Leave a Comment