உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Share

பெண்கள் கண்ணியமாகவும், கவுரவமாகவும்வாழும் உரிமையை வெல்ல உறுதியேற்போம்! எனக் கூறியுள்ள பாமக நிறுவனர் இராமதாசு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகில் போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய சக்தியாக திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.

ஒரு காலத்தில் மகளிர் இரண்டாம் தர குடிமக்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சமையலறைகள் மட்டும் தான் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்தன. ஆனால், அதன்பின் சட்டப் போராட்டங்களாலும், உரிமைப் போராட்டங்களாலும் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உரிமை பெற்றனர்.  

உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வெற்றிகரமாக வழங்கப் பட்டுள்ளது. போர்முனையில் இராணுவத்தை தலைமையேற்று நடத்தும் உரிமை பெண்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. மருத்துவத்தில் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்திருக்கின்றனர் என்பது இந்தியர்கள் பெருமிதப்பட வேண்டிய விஷயமாகும்.

ஆனாலும், பெண்களுக்கு நாம் வழங்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் போதிலும், அது இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. அதை சாத்தியமாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டியது அவசியமாகும்.

 அதுமட்டுமின்றி, பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையை வென்றெடுத்துத் தர வேண்டிய ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமை ஆகும். அதற்காக போராட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.


Share

Related posts

Coca-Cola பாட்டில்களை அகற்றியா ரொனால்டோ, தண்ணீர் குடியுங்கள் என சமிக்கை!

Udhaya Baskar

வனச்சரகர் வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

Admin

ரயில் டிக்கெட்டில் சலுகையை நீக்காதே! நடைமேடை கட்டணத்தை வாபஸ் பெறு!

Udhaya Baskar

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

அருந்ததியர் இடஒதுக்கீடு – சமூக நீதியை காக்க வேண்டும் – திருமா.

Udhaya Baskar

குடும்பத் தலைவனை காவு வாங்கிய கருவேப்பிலை ! அரியலூரில் வீதிக்கு வந்த குடும்பச் சண்டை!

Udhaya Baskar

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

ஊருக்கே உணவு அளித்தவர்கள் பட்டினி… உதவிக்கரம் நீட்டிய சமையல் கலைஞர்கள்

Udhaya Baskar

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

Leave a Comment