குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Share

ஆப்கனில் பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரங்களாக மட்டுமே இனி பார்க்கப்படுவர் என பாலிவுட் நடிகை வரினா ஹுசைன் சர்ச்சை பேட்டி அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிவிட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பாலிவுட் நடிகர்கள் பலர் ஆப்கானிஸ்தானின் மோசமான நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நடிகை வரீனா ஹுசைனும் அங்குள்ள நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள நடிகை வரினா அங்குள்ள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்கள் வரீனாவின் குடும்பத்தை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். ஒரு நேர்காணலில், வரினா தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும் இதுகுறித்து நடிகை வரீனா கூறுகையில், “நான் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறேன். ஆனால் மோசமான சூழ்நிலையில் சொந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு செல்வது மிகவும் கடினம் மற்றும் மன அழுத்தம். இந்தியாவில் தங்கியிருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம் என்றார் வரினா.

ஆப்கானிஸ்தான் தற்போது 20 ஆண்டுகளை பின்னோக்கி செல்வதாகவும், நாடு மீண்டும் பழைய வழியில் செல்கிற எனவும் தெரிவித்த நடிகை, ஆப்கனில் பெண்கள் ஒரு குழந்தை பெறும் இயந்திரமாகவே பார்க்கப்படுவர் என வருத்தம் தெரிவித்தார்.

சல்மான் கானின் ‘லாவராத்திரி’ படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானவர் வரீனா ஹுசைன். திரைப்படம் வெளியான சமயத்தில், தான் ஆப்கானிஸ்தான் என்பதால் பலரால் ட்ரோல் செய்யப்பட்டதாக வரீனா கவலை தெரிவித்திருந்தார்.


Share

Related posts

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

உயர்ந்தது சிலிண்டர் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி…

Admin

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

Udhaya Baskar

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Udhaya Baskar

கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

Udhaya Baskar

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

Leave a Comment