ஏன் தள்ளிப் போகிறது KGF2?

kgf 2
Share

2018ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான கேஜிஎஃப் ரசிகர்களை ஏகோபித்த ஆதரவை பெற்று வசூல் சாதனை படைத்தது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தனர். பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அதிலும் வெற்றியை குவித்தது. இதை அடுத்து கேஜிஎஃப் 2 எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ்,ரவீனா தண்டன் நடித்துள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்தது.

ஜூலை 16ல் கேஜிஎஃப் 2 வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று யாஷ் ரசிகர்கள் அன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனா அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. எனவே ஜூலை 16ல் ரிலீஸ் ஆகவிருந்த கேஜிஎஃப் 2 படம் தியேட்டர்கள் திறந்த பின் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் வேறு வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமான அறிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.


Share

Related posts

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

ஆந்திரா சமையல் 2 – தேங்காய் வெல்லம் போளி (கொப்பரக்காய பெல்லம் போளி)

Udhaya Baskar

தமிழகத்தில் ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Udhaya Baskar

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது – முதலமைச்சர் உறுதி

Admin

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Admin

Leave a Comment