மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழலையர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதாரணி. தனக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர் எம்எல்ஏ விஜயதாரணி. சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது தொகுதி மக்களுக்காக குரல் கொடுப்பவர் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி.

சட்டமன்ற நிகழ்வுகளைத் தவிர தனது தொகுதிக்கு செல்லும்போதெல்லாம் மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து தன்னால் முடிந்த வரை நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலஞ்சோலை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை விஜயதராணி திறந்துவைத்தார். இந்தக் கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டில் ரூபாய் 8 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அங்கன்வாடி மையம் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட ஆலஞ்சோலை கிராமத்தில் உள்ளது.

அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தபிறகு எம்எல்ஏ விஜயதாரணி அளித்த பேட்டியில்,

கடையாலுமூடு பேரூராட்சி மலையோரத்தில் உள்ள பகுதியாகும். இங்கு காலணி, பழங்குடியின, ஆதிதிராவிட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களது வாழ்வு வளம்பெற வன உரிமைச்சட்டம் 2006ஐ அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வசித்து 10 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டாவும், 10 சென்ட் இடமும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் இதுவரை ஆலஞ்சோலை காலனியில் வசிக்கும் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு 3 கி.மீ. தூரம் நடந்து சென்றனர். இனி இந்த நிலை மாறி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு செல்வார்கள். மேலும் அவர்களது ஆரோக்கியம் மேம்படும் என தெரிவித்தார்.

நீண்ட நாள் கோரிக்கையான அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏ விஜயதாரணிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.


Share

Related posts

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

அ.இரகுமான்கான் படத்திற்கு திமுக தலைவர் மலரஞ்சலி

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு உயிரிழப்பு !

Udhaya Baskar

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

மலைவாழ் மக்களுக்கு மளிகைப் பொருட்கள்!

Udhaya Baskar

அரையாண்டு தேர்வை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு

Admin

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

Leave a Comment