தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Share

திரைத்துரையிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், சோசியல் மீடியாவிலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை வனிதா விஜயக்குமார், தற்போது அவர் வெளியிட்ட செல்ஃபியை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் புதல்வி வனிதா. இவர் முதலில் 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து அவரை 2007ல் விவாகரத்து செய்தார். பின்னர் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு 2010ல் விலகினார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மணந்து கொண்டதன் மூலம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானார் வனிதா விஜயக்குமார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்து கொண்டது போல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இதைப் பார்த்து ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். ஆனால் அது வனிதாவும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் போஸ்டர் என்பது பின்னர் ரசிகர்களுக்கு தெரியவந்தது.

பலரும் தன்னை தரக்குறைவாக விமர்சித்ததால் கடுப்பான வனிதா திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்டால், அது சினிமா சூட்டிங்காக இருக்காதா என்றும், 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என பதிலளித்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் வெள்ளை நிற புடவையில் கழுத்தில் தாலியோடு இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார். கூடவே பிக்கப் ட்ராப் ஷூட்டிங்கில் இருந்தது போன்ற படங்களையும் பதிவிட்டுள்ளார். இருந்தாலும் இதைப் பார்க்கும் குறும்புக்கார நெட்டிசன்கள் மறுபடியுமா? என ஒற்றை வார்த்தையில் கமெண்ட் செய்து வனிதாவை கலாய்த்து வருகின்றனர்.


Share

Related posts

ஏப்ரல் மாதம் பள்ளிகளை திறக்கலாம்- பெற்றோர் கருத்து

Admin

பிரியா பிரகாஷ் வாரியாரின் ஹாட் போட்டோஸ்

Udhaya Baskar

ஆசிரியா் இல்லாத கல்லூரிகளுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

Admin

தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

OPPO Reno4 Pro Price Rs.34,990/-

Udhaya Baskar

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் !

Udhaya Baskar

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

பிரதமர் அலுவலகத்தை விற்க முயன்ற 4 பேர் கைது

Admin

Leave a Comment