தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Share

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா காரணமாக மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோர் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்றப் பயணிகள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் இதுகுறித்து சமூக வலைதளம் மூலம் மக்களிடையே பேசினார். அதாவது மும்பை மாநகரில் இதுவரை 19 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். ஆகவே, முதற் கட்டமாக தவணை தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும். 2வது தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம் எனக் கூறினார்.
மேலும் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து பொதுமக்கள் மாதாந்திர சீசன் பாஸ் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.


Share

Related posts

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

எம்.ஜி.ஆர் இடத்தை விஜய் நிரப்ப இயலாது! – அமைச்சர் ஜெயக்குமார்

Udhaya Baskar

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது!

Udhaya Baskar

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஒப்புதல்

Admin

தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Udhaya Baskar

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு – இராமதாசு வரவேற்பு

Udhaya Baskar

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

Leave a Comment