காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Share

காரில் செல்லும் நான் மாஸ்க் எதற்கு அணியவேண்டும் என ஒரு சிறுமி கேட்ட கேள்வியால் அந்த சிறுமியுடன் வாய்ச்சண்டை போடும் பரிதாப நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மாஸ்க் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு 200 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் காவல்நிலையம் ஒன்றிற்கு ஒரு நாளைக்கு 100 வழக்குகளாவது பதியப்பட வேண்டும் என உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர் சாலையில் எச்சில் துப்பியதால் 500 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு சென்றார் ஒரு பெரியவர். வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியவில்லை என்றால் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் ரூ.200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஒரு காரை மடக்கிய பெண் போலீஸ் ஒருவர் சிறுமி முக கவசம் அணியவில்லை என்று 200 ரூபாய் அபராதம் விதித்தார். அப்போது கோபம் அடைந்த அந்த சிறுமி, காரில் செல்லும் நாங்கள் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டார். ஆனால் பெண் போலீசோ தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறிவிட்டார். உடனே அந்த சிறுமியின் தந்தை அவள் சொன்னதை பெண் போலீசிடம் தமிழில் சொன்னார்.

பின்னர் பதில் தந்த போலீஸ், காரில் விட்டு இறங்கும்போது மற்றவர்களுக்கு கொரோனா இருந்து அது உனக்கு வந்துவிட்டால் என்ன செய்வது, அதனால்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த அபராதம் விதிக்கிறேன் என்று சொல்ல, அந்த சிறுமி கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஒரு காலத்தில் சிங்கப்பூரில்தான் சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் என்பார்கள். தற்போது தமிழகத்திலும் அந்த நடைமுறை வந்துவிட்டதால், இனி ஒரு சில மாதங்களிலும் தமிழகமும் சிங்கப்பூர் போல் சுத்தமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.


Share

Related posts

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

வைகை அணை நீர்மட்டம் உயர்வு, நீரில் மூழ்கிய விளை நிலங்களால் விவசாயிகள் வேதனை

Admin

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பல்கலைக் கழகம்

Udhaya Baskar

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

மீண்டும் 5 காசு உயர்ந்தது முட்டை விலை!

Udhaya Baskar

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

காய்கறி வாங்க கால் பண்ணுங்க – சென்னை மாநகராட்சி

Udhaya Baskar

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

சசிகலா விடுதலையால் அரசியலில் மாற்றம் ஏற்படாது: முதல்வர்

Admin

ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Udhaya Baskar

Leave a Comment