இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Share

விஜய் சேதுபதியின் “கடைசி விவசாயி”, விஷ்ணு விஷாலின் “எஃப்.ஐ.ஆர்”(FIR), அரவிந்த்சாமி நடித்த “நரகாசூரன்”, ‘அருவி’ பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தம்மனின் அடுத்தப்படமான ‘வாழ்’ ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் தரத்தில் காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய சிறந்த படங்கள் மூலம் மாறுதலை ஏற்படுத்திய இயக்குனர் மணிகண்டனின் அடுத்தப்படம் “கடைசி விவசாயி”.

ஆண்டவன் கட்டளையில் தயாரிப்பு தரப்பில் தரப்பட்ட நெருக்கடி அவரை பாதித்தது. படைப்பில் எவ்வித சமரசமும் கூடாது என்றால், சொந்தமாக படத்தை தயாரிக்க வேண்டும் என்ற புரிதலில் அவர் தயாரித்து இயக்கிய படம், கடைசி விவசாயி. விவசாயத்தை மேலோட்டமாக ஊறுகாயாக தொட்டுச் செல்லும் படமில்லை இது. பல மாதங்கள் விவசாயிகளுடன் தங்கியிருந்து, அவர்களின் நடைமுறை இன்னல்களை உணர்ந்தறிந்து இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

விஜய் சேதுபதி, யோகி பாபு என அறிந்த முகங்களும், படத்தில் இடம்பெறும் பிற கதாபாத்திரங்கள் அனைவரும் கிராமத்தைச் சேர்ந்த தொழில்முறை அல்லாத கலைஞர்கள், விவசாயிகள் என அறியா முகங்களுடன் இளையராஜா இசை அமைத்த இப்படத்தை திரையரங்கில் வெளியிடவே மணிகண்டன் விரும்பினார். காலம் அதற்கு கனிவாக இல்லாத நிலையில் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.

அந்த வகையில், ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ படமும் பல பாராட்டுக்களைக் குவித்த ‘அருவி’ படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தம்மனின் அடுத்தப்படமான ‘வாழ்’ படமும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பதால், இன்னும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

மற்றும் விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் நடித்துள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படமும் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமையையும் விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

இந்த நான்கு படங்களின் ஓடிடி குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share

Related posts

வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்! வாழ்த்துவீர்களா தலைவரே! – MKS

Udhaya Baskar

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

சிறையில் படித்து 3ம் வகுப்பு பாஸான சசிகலா

Admin

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Admin

பட்டணத்து பணம் வேணாம்! பட்டிக்காட்டு கூழ் போதும் ! மடிக்கணியை வீசிவிட்டு மண்வெட்டியை எடுத்த பட்டதாரி !

Udhaya Baskar

Leave a Comment