களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Share

1992 செப்டம்பர் 5, தம்பி இராதாவின் நினைவுநாள், மாலை 6 மணியளவில் மதுரை கோபுதூரில் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது தம்பி இராதா விபத்தில் பலியாகிவிட்டான் என்ற செய்தி வந்தது. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அன்று பிற்பகல் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கப்பட்டி கிராமத்தில் என்னோடு இயக்க கூட்டமொன்றில் கலந்துகொண்ட தம்பி இராதா பெரியவர் சந்தானம் அவர்களின் இளைய மகனுடன் இருசக்கர வண்டியில் வாடிப்பட்டி வழியாக மதுரை திரும்பும் போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மதுரை வந்து என்னுடன் தங்கியிருந்த தம்பி இராதா எனக்கும் இயக்கத் தோழர்களுக்கும் உற்றதுணையாக இருந்தான். இயக்க நிகழ்ச்சிகளிலும் போராட்டங்களிலும் பங்கெடுத்துக்கொண்டான். இளம்வயதிலேயே அவன் இயக்கப்பணியில் மிகுந்த ஆர்வம் காட்டினான். ஆனால் திடிரென அவன் விபத்தில் பலியானது என்னை நிலைகுலைய வைத்தது. அந்த துக்கத்திலிருந்து மீள இயலாத நிலையில் ஓரிரு மாதங்கள் மிகவும் வேதனைப்பட்டேன். என் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நான் துயரத்தில் வீழ்ந்ததால் என் பெற்றோர் எனக்கு ஆறுதல் கூறினார்கள். அதன் பின்னர் மீண்டெழுந்து எனது அரசியல் பணிகளை தொடர்ந்தேன். தொடக்கக்காலத்தில் களப்பணிகளில் எனக்கு உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு எனது செம்மாந்த வீரவணக்கம்!

இவண்,
தொல்.திருமாவளவன்.


Share

Related posts

சென்னையில் காலை 7 மணி முதலே முதல் மெட்ரோ ரயில் – QR டிக்கெட் அறிமுகம்

Udhaya Baskar

ரஜினிகாந்த் கட்சியின் பின்னணியில் பாஜக வா? பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு

Admin

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

தங்கம் விலை ரூ.288 குறைந்தது

Udhaya Baskar

OPPO Reno4 Pro Price Rs.34,990/-

Udhaya Baskar

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

புதிய கட்சி துவக்குகிறார் விஜய் தந்தை?

Admin

கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Udhaya Baskar

ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Udhaya Baskar

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

Leave a Comment