தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கிடையாதா?

Share

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோர முடியாத வகையில் சீரம் இந்தியா நிறுவனம் மத்திய அரசிடம் சட்ட பாதுகாப்பு கேட்டுள்ளது.

வெளிநாட்டு தடுப்பூசிகளான ப்பைசர் மற்றும் மோடனா ஆகியவற்றை விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கும் என்று தெரிகிறது. அதாவது தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அந்த நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை மத்திய அரசு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவும் சட்ட ரீதியான பாதுகாப்பை கோரியதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. இழப்பீடு கோருவதிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால், இந்திய நிறுவனமான சீரம் மட்டுமல்ல அனைத்து தடுப்பூசி நிறுவனங்களும் அதே பாதுகாப்பை பெற வேண்டும் என சீரம் நிறுவனம் கூறியதை மேற்கோள் காட்டி ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசிக்கும் மத்திய அரசு இதுவரை சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment