தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Share

மற்றவர்களை போல நான் அலுவலகத்தில் மட்டும் இருக்க மாட்டேன். மக்களுக்காக துப்பாக்கியுடன் போரிடுவேன் என ஆப்கன் பெண் கவர்னர் சலீமா மஜாரி. தாலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவமே பின்வாங்கியபோதும் அதை எதிர்த்து நின்றவர் பெண் போராளி சலீமா.

எனினும் சலீமா மஜாரி இப்போது தாலிபான்களால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் நதியா தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆப்கான் முதல் பெண் கவர்னர் சலீமா மஜாரி தாலிபான்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.

சலீமா மஜாரி யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

1980ஆம் ஆண்டு ஈரானில் பிறந்தவர் சலீமா மஜாரி. சோவியத் போரின் போது, அவரது குடும்பம் ஆப்கானை விட்டு வெளியேறி ஈரானில் வசித்தது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவர்கள் ஆப்கன் திரும்பினர். 30,000த்திற்கும் அதிமான மக்கள் வசிக்கும் வடக்கு ஆப்கானில் உள்ள சர்கின்ட் மாவட்டத்தின் முதல் பெண் கவர்னர் சலீமா. 40 வயதான இவர் 2018ஆம் ஆண்டு கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் கவர்னராக மட்டுமின்றி 2019ஆம் ஆண்டு முதல், தலிபான் எதிர்ப்பு போராளிகளுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். தலிபானுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் சலீமா மஜாரி.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் சலீமா கவர்னராக உள்ள மாவட்டத்தை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். மாவட்டத்தின் பாதுகாப்பை அதிகரிக்க 600 உள்ளூர் வாசிகளை நியமித்திருந்தார் சலீமா. அவர்கள் ராணுவ வீரர்கள் அல்ல, சாதாரண விவசாயிகள். தங்கள் கால்நடைகளை விற்று ஆயுதங்களை வாங்கி தலிபான்களுக்கு எதிராக களத்தில் நின்றவர்கள். ஆப்கானிஸ்தான் முழுவதும் அடிபணிந்தபோதும், இறுதிவரை போராடியது என்னமோ சலீமாவின் மாவட்டம் தான்.

”ஆப்கனில் பெண்களுக்கு சுதந்திரமான இடம் கிடையாது. ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றிய பிறகு பெண்கள் அனைவரும் வீடுகளில் சிறைவக்கப்பட்டுள்ளனர்” என்று பேட்டி ஒன்றில் சலீமா தெரிவித்து இருந்தார்.


Share

Related posts

கருப்புப் பூஞ்சை மருந்து தட்டுப்பாடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை

Udhaya Baskar

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 75% குறைவு: சுகாதாரத் துறை

Admin

MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு

Udhaya Baskar

ரஜினிகாந்த் கட்சியின் பின்னணியில் பாஜக வா? பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு

Admin

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

உயர்ந்தது சிலிண்டர் விலை… பொதுமக்கள் அதிர்ச்சி…

Admin

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

9 மாதங்களுக்கு பின் குற்றால அருவி திறப்பு

Admin

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

Udhaya Baskar

மோசடி நபர்களிடம் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை

Admin

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment