கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி

Share

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற சாதனத்தை மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

விரைவாக கொரோனா இருப்பதை கண்டறியும் இக்கருவியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மூக்கில் உள்ள சளி மாதிரியை எடுத்து தொற்று இருப்பதை வீட்டிலேயே உறுதி செய்யும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த பரிசோதனையை எல்லாரும் கண்மூடித்தனமாக செய்து விடக்கூடாது எனவும், தொற்று அறிகுறிகள் உள்ளோரும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரும் மட்டும் இக்கருவியை பயன்படுத்தலாம் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இக்கருவியின் மூலம் ஒருவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தால் அது உறுதியாக பாசிட்டிவ் என்றே கருதப்படும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஆனால் அறிகுறிகள் இருந்து இக்கருவி மூலம் சோதனை செய்து அதில் நெகட்டிவ் என வந்தால் தற்போது வழக்கமாக செய்யப்படும் ஆர்டிபிசிஆர் சோதனையை செய்ய வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. இந்த சோதனையை மேற்கொள்ள வசதியாக மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.


Share

Related posts

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

எல்லைத்தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது

Admin

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கே வழங்குக – இராமதாசு

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Admin

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

Leave a Comment