ஆந்திரா சமையல் 2 – தேங்காய் வெல்லம் போளி (கொப்பரக்காய பெல்லம் போளி)

Share

ஆந்திரா சமையல் 2 தேங்காய் வெல்லம் போளி (கொப்பரக்காய பெல்லம் போளி)

தேவையான பொருள்கள்:

முழுத் தேங்காய்         – 1

மைதா மாவு             – ¼ கிலோ

வெல்லம்                – ¼ கிலோ

எண்ணெய்               – ¼ கிலோ

உப்பு                    – தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்துத் துருவிய தேங்காயைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

மைதாமாவில் சிறிதளவு உப்பு போட்டு, 100 கிராம் எண்ணெய் ஊற்றி, அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, மாவு தளதளவென்ற பதத்தில் இருப்பதுபோலப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவை ½ மணி நேரம் ஊற விடவும்.

பிறகு வதக்கிய தேங்காயை மிக்ஸியில் போட்டு, வெல்லத்தைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் அரைத்த விழுதை ஊற்றவும். தேங்காய், வெல்லம் கெட்டியாக வரும் வரை வதக்கவும். நன்றாக கிளறி, உருண்டை பதத்துக்கு வரும்போது இறக்கிவிடவும். ஆறிய பிறகு அதைச் சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்கவும்.

அதன் பிறகு வாழைஇலை அல்லது பால் கவர் அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஊற வைத்த மாவை சிறிதளவு எடுத்து இலையில் அல்லது பால் கவரில் வைத்து, கையினாலேயே அகலப்படுத்தவும். அதில் ஒரு வெல்லம், தேங்காய் உருண்டை வைத்து பூரி அளவில் தட்டவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைக்கவும். கல் காய்ந்ததும், சிறிதளவு எண்ணெய் விட்டு, தட்டி வைத்த போளியை ஒவ்வொன்றாகப் போடவும். வெந்த பிறகு திருப்பிப் போடவும். இருபுறமும் பொன்முறுவலாக வெந்த பிறகு எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த தேங்காய், வெல்லம் போளி வெது வெதுப்பான் சூட்டில் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மாலை நேரச் சிற்றுண்டிக்கு ஏற்ற ஓர் உணவு.


Share

Related posts

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Udhaya Baskar

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

சட்டப்பேரவை தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு

Admin

கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா?- மு.க.ஸ்டாலின்

Admin

test news

Admin

விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Admin

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

காய்கறி வியாபாரி, குழந்தை உயிரை பறித்த டேபிள் ஃபேன்

Udhaya Baskar

தேனியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனம்

Admin

Leave a Comment