அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Share

கன்னியாகுமரி சுசீந்திரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயிலில் மும்மூர்த்திகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள்பாலிக்கின்றனர். இங்கே வடக்கு பிரகாரத்தில் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

சிவன், விஷ்ணு, பிரம்மா மும்மூர்த்திகள் குடிகொண்டிருந்தாலும் சுசீந்திரத்தின் நாயகனாக, 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பிரம்மாண்டமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் இந்திர விநாயகர், நீலகண்ட விநாயகர், மார்த்தாண்ட விநாயகர், பெண் உருவில் உள்ள விக்னேஸ்வரி சன்னதி உள்ளது. தூணில் பெண் உருவில் விநாயகர் காட்சித் தருகிறார். பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையாரை விக்னேசுவரி, விநாயகி, கணேசினி, கணேஸ்வரி எனப் பல பெயர்களில் வழிபடுகின்றனர்.

புது திருமண தம்பதியர் அவசியம் வழிபட வேண்டிய கோயிலிது. இக்கோயிலில் பெண் வடிவ கணேசனியை அவசியம் தரிசிக்கவேண்டும்.

விநாயகரை பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பமான ‘விக்கினேஸ்வரி” இங்கு காணலாம். கணபதியும், அவருக்கு இடது பக்கத்தில் அன்னை பார்வதியும் ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் உள்ளனர். மேலும் ஒரே கல்லில் செதுக்கிய நவகிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் அமைந்துள்ளது.

இங்கு சங்கீதத் தூண்களை கொண்ட குலசேகர ஆழ்வார் மண்டபம் உள்ளது. அதன் நடுவே 18 வருடங்களாக தொடர்ந்து ஏரிந்து கொண்டிருக்கும் அணையா காடா விளக்கு இக்கோவியின் சிறப்பு.

இக்கோயிலில் சித்திரை தெப்பத்திருவிழா, ஆவணி பெருநாள் திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி திருக்கல்யாண திருவிழா விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் உள்ள இக்கோயிலுக்கு சென்றால் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் போன்ற கோரிக்கைகள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

பட்டு உடைகள் படைத்தல், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தருதல், சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என அபிஷேக ஆராதனைகளும் இறைவனுக்கு செய்யலாம். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாற்றலாம்.


Share

Related posts

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Udhaya Baskar

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Admin

Leave a Comment