கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Share

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தாண்டிக்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மின் இணைப்பு இருந்தும் மின்கம்பியில் பழுது ஏற்பட்டுள்ளதால் போதிய வெளிச்சம் இல்லாமல் அரசுப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்த அலுவகத்தில் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்கம்பி பழுது ஏற்பட்டுள்ளதால் மின்சாரம் இல்லாமல் போதிய வெளிச்சமின்றி அரசுப் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது என மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர் கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும், கட்டிடமும் சிதலமைந்து காணப்படுவதால் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்தக் கட்டிடத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் சார் ஆட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்திட வேண்டும் என்றும் மேலும் தாண்டிக்குடியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்சாரம், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர் கணேஷ்பாபு கோரிக்கை வைத்துள்ளார்.


Share

Related posts

சென்னை அல்லது மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கப்படும்…

Admin

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

Admin

திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

Udhaya Baskar

இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Admin

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சேவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்டுடன் பயணிக்கும் தூதர்!

Udhaya Baskar

தலைகீழாக தொங்கியபடி 111 அம்புகள் எய்த 5 வயது குழந்தை !

Udhaya Baskar

எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகட்டிவ் – மகன் மறுப்பு

Udhaya Baskar

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது

Admin

இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Udhaya Baskar

Leave a Comment