திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Share

திருவாரூரில் கொரோனா நோய்த்தொற்று பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொரோனா நோய்த்தொற்று பணிகளுக்காக அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை, மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணியாற்ற தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள், நுண்கதிர் நுட்புனர்கள், புள்ளிவிவர பதிவாளர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணிநியமன ஆணையினை சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தா  தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

பின்னர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன்nவிளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டுகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளாக ஒரு நாளைக்கு 3100 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா நோய் தொற்று தடுப்பூசி 62000 நபர்களுக்கும், 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி 20000 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் 4000 கொரோனா நோய் தொற்று தடுப்பூசி போடப்படவுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அடிப்படை நிலையிலான கொரோனா தொற்றிற்க்கு சிகிச்சை அளிப்பதற்கு படுக்கைகள் வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நோய்த்தொற்று பரவலினால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தேவை அதிகரித்து உள்ளது. அதனை ஈடு செய்திட ஏதுவாக இம்மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் தற்காலிகமாக  315 பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு இன்றைய தினம் முதற்கட்டமாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது என சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், திட்ட இயக்குநர் தெய்வநாயகி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், மாவட்ட சுகாதார துணை இயக்குநர் கீதா, மாவட்ட சுகாதார இணை இயக்குநர்(பொ) உமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) புண்ணியகோட்டி, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் பழனிசாமி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


Share

Related posts

தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Udhaya Baskar

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Udhaya Baskar

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

மகரவிளக்கு கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Admin

தமிழகத்தில் செப்டம்பர் 13 மாநிலங்களவை தேர்தல்

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Admin

வெளிநாட்டு வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த பெண்

Admin

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

Leave a Comment