பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி

Share

ஹைதராபாத்:
டிகை விஜயசாந்தி டிசம்பர் 7ம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விவேக் வெங்கடசாமி அறிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தியும் ஒருவர். இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1998-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.

அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி இன்று விலகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விஜயசாந்தி தற்போது பாஜகவில் இணையவிருப்பது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் பாஜக தலைவர் விவேக் வெங்கடசாமி கூறுகையில், விஜயசாந்தி டிசம்பர் 7ம் தேதி முறைப்படி பாஜகவில் இணைவார் என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Admin

கொரோனா தடுப்பூசி குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – முதலமைச்சர்

Admin

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

தமிழகம் வருகிறது தேர்தல் கமிஷன் உயர்மட்டக்குழு

Admin

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை – அமைச்சர்

Admin

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

சூரப்பாவுக்கு எதிராக விசாரிக்க குழு – ஆளுநர் அதிருப்தி

Admin

நோய் தொற்று மையமாக மாறி வரும் மொழிப்போர் தியாகிகள் மயானம்

Udhaya Baskar

போலீஸ் போல் நடித்து 2.25 லட்சம் அபேஸ் ! கோழி சம்பாதித்து கொடுத்த பணம் பறிபோனது !

Udhaya Baskar

Leave a Comment