17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Share

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் 17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார் திமுக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களின் வெள்ளை அறிக்கைகள் மற்றும் 2001ம் ஆண்டு அதிமுக அமைச்சர் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் வருமானம் அதிக அளவில் சரிந்துவிட்டதாக பலமுறை கூறியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தமிழ்நாட்டில் வருமானம் குறைந்து, செலவு அதிகரித்துவிட்டதாக தெரிவித்தார்.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் தமிழகத்தின் வருவாய் உபரியாகவே இருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், 2011-2016 வரை ஜெயலலிதா அரசில் வருவாய் – செலவு சமமாக இருந்ததாக தெரிவித்தார். வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய கடந்த 5 ஆண்டுகளில் 1 கோடியே 50 லட்சம் அளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

தமிழ்நாட்டிற்காக கடந்த 5 வருடங்களில் பெற்ற 3 லட்சம் கோடி ரூபாய் பொதுக்கடனில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் பெரிய அளவில் நிதி நிலை பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆனால் கொரோனா வரும் முன்பே தமிழ்நாடு நிதி நிலையில் பாதிப்பு ஏற்பட தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டார். மேலும் அதிமுக ஆட்சி நடைபெற்ற 2011 – 2016ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 17,000 கோடி ரூபாய் என தெரிவித்தார்.


Share

Related posts

திமுக முப்பெரும் விழா – செப்டம்பர் 15ல் விருது பெறுவோர் விவரம்

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

Udhaya Baskar

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

அனைத்து படிப்புகளுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Admin

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

பாலியல் பலாத்காரத்திற்கு தூக்கு தண்டனை- மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Admin

நீட் தேர்வு : வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை!

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

பாதுகாப்பை பலபடுத்துங்கள்- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

Leave a Comment