அதிகம் இல்லை ஜெண்டில்மென்! உங்கக் கடன் ரூ.2.63 லட்சம்தான்!

Share

தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கடன் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் காலையில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

அதில் அவர் முந்தைய திமுக ஆட்சியில் உபரி வருவாய் என்ற நிலை இருந்தது என்றும் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசு வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டதால் வட்டி அதிகரித்து விட்டதாகவும், தமிழக அரசின் கடன் சுமை 5.24 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதாவது ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ஆக உள்ளது என்று கூறினார். தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்கு 87 கோடியே 31 லட்சம் ரூபாயை கோடியை வட்டியாக செலுத்துகிறது.

மேலும் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் 2 ஆயிரத்து 577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாததால் பணக்காரர்களுக்கு பலன் கிடைக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு 20 ஆயிரத்து 033 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.24 உயர்ந்தது

Udhaya Baskar

பள்ளியில் 85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்!

Udhaya Baskar

இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Udhaya Baskar

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Admin

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

ஏற்றுமதி நிறுவனங்கள் திறப்பால் கொரோனா அதிகரித்துவிடக்கூடாது – ராமதாசு

Udhaya Baskar

Leave a Comment