தமிழ்நாடு அரசு 2021-22 பட்ஜெட்

Share

வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் உரை..!

சென்னை: 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். திருத்திய வரவுசெலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு கடமைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்களுக்கு தீர்வு: நிதியமைச்சர் உரை

சென்னை: தேர்தல் வாக்குறுதியின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் நிதிநிலை தவறுகளை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது: நிதியமைச்சர் உரை

சென்னை: கடந்த ஆட்சியின் நிதிநிலை தவறுகளை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என நிதியமைச்சர் உரை நிகழ்த்தியுள்ளார். தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் இந்த பட்ஜெட் உரையில் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது: நிதியமைச்சர் உரை

சென்னை: மாநில அரசின் நிதியை திசை திருப்பும் வகையில் ஒன்றிய அரசின் வரிமுறை இருக்கிறது என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார். வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்கள் கருத்து என நான்கு முக்கிய கூறுகளுடன் உறுதியான நடவடிக்கை அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஜூன் 3ல் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ.10 லட்சம் வழங்கப்படும், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் உரை

சென்னை: 2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் தமிழ் செம்மொழி விருது ரூபாய் 10 லட்சம் தொகையுடன் இனி வழங்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807.56 கோடி உயர்த்தி ஒதுக்கீடு.
  • அனைத்து துறை அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.
  • பேரிடர் மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1360 கோடி போதுமானதாக இல்லை.

தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறைக்கு 8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 14,317 புதிய பணியிடங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையின் தரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் !

சென்னை: புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் நியாயவிலைக்கடைகள் அமைக்கப்பட்டு உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி

ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான காசிமேடு மீன்பிடித்துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ரூ.6,607.17 கோடியும், நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்புகளுக்காக ரூ.30 கோடியும், 200 குளங்களின் தரங்களை உயர்த்த ரூ.111.24 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழுக்கு கடன் உறுதி செய்ய ₹ 20,000 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு காவல்துறைக்கு ₹ 8,930.20 கோடி ஒதுக்கீடு. மேலும் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் 14, 317 உடனே நிரப்பப்படும்

மீன்வளத்துறைக்கு ₹1149 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ₹6,607 கோடி நிதி ஒதுக்கீடு

“தமிழ் வளர்ச்சித் துறைக்கு ₹80 கோடியும், தொல்லியல் துறைக்கு ₹29 கோடியும் ஒதுக்கீடு” – தமிழ்நாடு நிதியமைச்சர்

கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ₹3,954 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

புதிதாக பெருநகர வளர்ச்சி குழுமங்கள் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஓசூரில் ஏற்படுத்தப்படும் – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதியேற்றுள்ளது – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு

நமக்கு நாமே திட்டத்தில் கணிசமாக பங்களிப்போருக்கு ரூ.300 கோடியில் முதலமைச்சர் விருது

நெய்வேலி நிலக்கரி நிலையத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி அமைக்கப்படும்

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி மீண்டும் ரூ.3 கோடியாக அளிக்கப்படும்

விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்

சுயஉதவிக் குழுக்களுக்கு நடப்பாண்டில் 20,000 கோடி ரூபாய் கடன் வழங்குவது உறுதி செய்யப்படும்

முதலமைச்சரின் விரிவான காப்பீடுத் திட்டம் ரூ.1,046.09 கோடி ரூபாயில் நடைமுறைப்படுத்தப்படும்

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்


Share

Related posts

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று – விரைவில் குணமடைய தலைவர்கள் ஆவல் !

Udhaya Baskar

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

இனி வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பலாம்..

Admin

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

குடும்ப கட்டுபாடு செய்யுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது

Admin

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

Admin

test news

Admin

ஆன்லைனில் வகுப்புகளுக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் ! ஐயா ஜாலி !

Udhaya Baskar

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

Udhaya Baskar

சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

Admin

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ! விரைவில் முதல்வர் அறிவிப்பு!

Udhaya Baskar

Leave a Comment