கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Share

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் ஆய்வகங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வோருக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ 1,200-ல் இருந்து 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை கட்டணம் ரூ.800 இருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குழுவாக பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ600 ல் இருந்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.”

மேலும் வீட்டிற்கு நேரடியாக சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக 300 ரூபாய் வசூலித்துக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

கோரிக்கை நிறைவேறும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை -டாக்டர் ராமதாஸ்

Admin

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Rajeswari

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மருத்துவர் இராமதாசு

Udhaya Baskar

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் – நீதிபதிகள் வலியுறுத்தல்

Admin

பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Admin

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை – சென்னை வானிலை ஆய்வு மையம்

Admin

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

Leave a Comment