பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Share

வேலூர்:
ந்திர மாநிலம் கலவகுண்டா அணையில் இருந்து சுமாா் 12,000 கன அடிக்கு மேல் உபரிநீா் பொன்னை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், அதன் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொன்னை ஆறு மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ராணிப்பேட்டை ஆட்சியா் கிளாஸ்டன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் கலவ குண்டா அணையிலிருந்து சுமாா் 12,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டு இருப்பதால் பொன்னை ஆறு அணைக்கட்டு, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னை ஆற்றங்கரை ஓரமாக வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.மேலும் குழந்தைகள், பெரியவா்கள் முதியோா் என அனைத்து தரப்பினரும் ஆற்றிலும், நீா் நிலைகளிலும் குளிக்க செல்லவோ, வெள்ளத்தை வேடிக்கைப் பாா்க்கவோ வேண்டாம். உயிா்ச்சேதம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்படி அதில் பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


Share

Related posts

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Udhaya Baskar

அமைச்சர் அந்தஸ்து வேணாம்; முதல்வர் அந்தஸ்துதான் வேணும்- எடியூரப்பா

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

அன்புமணி ராமதாஸ் மகள் திருமணம்

Udhaya Baskar

அழகிரி கட்சி துவங்கினால் பாஜக ஆதரவு

Admin

பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Udhaya Baskar

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

புதிய கட்டிடப்பணியை திமுக எம்எல்ஏ திடீர் ஆய்வு ! பரபரப்பு!

Udhaya Baskar

மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்

Admin

Leave a Comment