ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Share

புறநகர் ரயில்கள் தாமதமாக வருவதைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டிற்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி மற்றும் எலாவூருக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை நம்பித்தான் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மக்களும் இந்த ரயிலில் பயணம் செய்துதான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் எண்ணூர் வரை மட்டுமே 4 வழி தண்டவாளப் பாதை அமைந்துள்ளது. எண்ணூரில் இருந்து 2 வழித்தடத்தில்தான் புறநகர் ரயில்களும், விரைவு ரயில்களும் சென்றாக வேண்டும். அதனால் விரைவு ரயில்கள் வரும்போதெல்லாம் புறநகர் ரயில்கள் குறிப்பிட்ட நிலையங்களில் நிறுத்தப்பட்டு விடும். பின்னர் விரைவு ரயில்கள் சென்ற பிறகு புறநகர் ரயில் புறப்பட்டு செல்லும். சில சமயங்களில் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி விரைவு ரயில்கள் வரவில்லை என்றால் அதுவரை உள்ளூர் மக்கள் செல்லும் ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை. இதனால் பணிக்கு செல்வது தாமதம் ஆகிறது எனக் கூறி பயணிகள் அடிக்கடி ரயில் மறியலில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று காலை கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரி சென்ற ரயில் பொன்னேரிக்கு தாமதமாக வந்து சேர்ந்தது. இதனால் கோபம் அடைந்த பயணிகள் அந்த ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். அதாவது காலை நேரத்தில் ரயில் தாமதமாக வருவது மட்டுமின்றி வேளச்சேரிக்கு அதிக ரயில்கள் விடப்படுவதாக வாக்குவாதம் செய்தனர். சென்னை சென்ட்ரலுக்கு ரயில்கள் விட்டால்தான் வேலைக்கு செல்வது எளிது என்றும் தங்களது குறையை கூறினர். இதனால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த நிலைய அதிகாரிகள் அந்த ரயிலை சென்ட்ரலுக்கு மாற்றி விடுவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பயணிகள் சமாதானம் அடைந்து ரயிலில் ஏறி சென்றனர். இதனால் சுமார் 1 மணிநேரம் அந்த மார்க்கத்தில் ரயில்கள் தாமதமாக சென்றது.


Share

Related posts

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Admin

NET 2020 தேர்வுக்கு இலவச பயிற்சி தருகிறது யூனிவர்சிட் ஆஃப் மெட்ராஸ்

Udhaya Baskar

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

ஏன் தள்ளிப் போகிறது KGF2?

Udhaya Baskar

பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Udhaya Baskar

செல்லிடப்பேசி வாயிலாக கொரோனா பரிசோதனை

Admin

Leave a Comment