விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Share

கொடைக்கானலில் சுமார் 2.25 லட்சம் விதைப் பந்துகளை தூவிய மாணவிகள் சுபகீதா மற்றும் சஜிதா ஆகியோரின் சமூக சேவையை பாராட்டி திண்டுக்கல் ஆட்சியர் கவுரவித்துள்ளார்.

மேலும் இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் மூலம் சுபகீதா, சஜிதா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதக்கம் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளார். பள்ளி மாணவிகளான சுபகீதா, சஜிதா ஆகியோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2.25 லட்சம் விதை பந்துகள் தயாரித்து தூவியுள்ளனர். மேலும் இவர்கள் உலக அளவில் முன் கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோரை கவுரவப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளை சுற்று தூய்மைப்படுத்தி அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான பழ மரக்கன்றுகளை நட்டனர்.

இவர்கள் முயற்சிக்கு கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன், உகார்தே நகர் பங்கு தந்தை பீட்டர் சகாயராஜ் திண்டுக்கல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன்ரதி ஆகியோர் பாராட்டினர்.

மேலும் கொடைக்கானல் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் அமல்ராஜ் முதன்மைக் கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் தூய்மைப் பணியாளர்கள் மாணவர்களை வைத்து மரக்கன்று நடவு செய்யப்பட்டது மேலும் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்கள் மேலும் இவர்கள் 2018ஆம் ஆண்டு கஜா புயலின் போது கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 5 ஆயிரத்திற்குகான காசோலையை திண்டுக்கல் ஆட்சியரிடம் வழங்கினார்கள். தற்போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் குழந்தைகளின் சேவைகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக தங்கள் பணியை செய்ய வேண்டும் எனவும் குழந்தைகளை வாழ்த்தினார்.

மேலும் மாணவிகளின் முயற்சியை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். திண்டுக்கல் சாரக டி.ஜ.ஜி . முத்துச்சாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சென்தில் வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு , கொடைக்கானல் உதவி ஆட்சியர் சிவ குரு பிரபாகரன், தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி , மிஸ்டி மவுண்ட் இயக்குனர் , திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோர் குழந்தைகளை வாழ்த்தினர்.


Share

Related posts

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.312 குறைந்தது

Udhaya Baskar

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

அம்மா உணவகத்தில் இலவச உணவு ! ஏழைகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் 1 – துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

Leave a Comment