மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார் !

Share

சென்னை கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பால பவன் பள்ளியைத் தொடர்ந்து மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்ம ஷேசாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ஆன்லைன் வகுப்பின்போது பாலியல் தொல்லை தந்ததாக மாணவிகள் புகார் தந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பணிபுரிந்த வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக, முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இது குறித்து ஏற்கனவே புகாரளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் பூதாகரம் ஆனதை அடுத்து அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித் துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதை அடுத்து ஆசிரியர் ஆனந்த் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

மேகதாது அணை குறித்து அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Udhaya Baskar

நீலகிரியில் அதி கனமழை பெய்யும் ! விரைந்தது பேரிடர் மீட்புக் குழு !

Udhaya Baskar

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஆவின் நிர்வாகத்தை முதலமைச்சர் காப்பாற்ற வேண்டும் – சு.ஆ.பொன்னுசாமி !

Udhaya Baskar

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் விநியோகம் !

Udhaya Baskar

புத்தாண்டைபோல காணும் பொங்கலுக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் – காவல்துறை அறிவிப்பு

Admin

Leave a Comment