உலக மகளிர் நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Share

மார்ச் 8ம் தேதி உலக மகளிர் நாள் கடைப்பிடிக்கப்படுவதை யொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய முகநூல் பதிவில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்!பெண்களின் உரிமைகள் கவனத்துடன் எப்போதும் பாதுகாக்கப்படுவதற்கும், அவர்கள் தற்சார்புடன் கூடிய தகுதி மிக்க முன்னேற்றம் அடைவதற்கும் குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சமபங்கு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழு, காவல்துறையில் பெண்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தியது தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு.

கழக ஆட்சி மலர்ந்ததும் அனைத்துக் குடும்பத் தலைவியருக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும். எதிர்வரும் காலத்திலும் உரிமைத்தொகை உள்ளிட்ட பெண்களுக்கான பலவகைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன். சமுதாயத்தில் சரிபாதியளவில் உள்ள பெண்ணினத்தைப் பலபடப் பாராட்டிப் பெருமைப் படுத்தியிருக்கிறது தமிழ் இனத்தின் நிரந்தரத்துவம் பெற்ற இலக்கியங்கள். அத்தகைய பெண்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் நாளாம் இன்று இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!


Share

Related posts

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Udhaya Baskar

+2 மாணவிகளுக்கு இலவச கண் மருத்துவ பயிற்சியும், வேலையும் ! +2 విద్యార్థులకు ఉచిత ఆప్తాల్మాలజీ శిక్షణ మరియు పని !

Udhaya Baskar

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா?

Udhaya Baskar

ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான பணம் கருகியது

Admin

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Udhaya Baskar

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள்- துரைமுருகன் கண்டனம்

Udhaya Baskar

Leave a Comment