தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Stalin_Vinayagamurthy_scooty
Share

சென்னை கொளத்தூரில் மின்கசிவினால் குடிசை, மற்றும் மாற்றுத்திறனாளியின் இருசக்கர வாகனம் எரிந்துவிட்ட நிலையில் அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய ஸ்கூட்டி வழங்கி உதவியுள்ளார்.

சென்னை கொளத்தூர் மேற்கு பகுதி, 64அ-வது வட்டத்தில் வசித்து வரும் மாற்றுத் திறனாளி பி.வினாயகமூர்த்தியின் குடிசை வீடு, மின்கசிவின் காரணமாக எரிந்து சாம்பலானது. இதில் அவர் பயன்படுத்தும் ஸ்கூட்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்துவிட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், மாற்றுத் திறனாளியான தான் பயன்படுத்திட ஸ்கூட்டி வாங்கி தருமாறு கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது கோரிக்கை நிறைவேற்றும் விதமாக 3.2.2021 அன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வினாயகமூர்த்திக்கு புதிய ஸ்கூட்டி வாகனத்தை வழங்கினார்.

இந்நிகழ்வில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., டிசம்பர்-3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் டி.எம்.என்.தீபக் கொளத்தூர் மேற்கு பகுதிச் செயலாளர் ஏ.நாகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மகேஷ்குமார், 64அ-வது வட்டச் செயலாளர் கே.வி.சண்முகம், ஆகியோர் உடனிருந்தனர்.


Share

Related posts

மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Udhaya Baskar

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

அரசு அதிகாரி வீட்டில் ரெய்டு கோடிக்கணக்கான பணம் பறிமுதல்

Admin

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

5 நிமிடத்தில் அஞ்சலகத்தில் ஆன்லைன் பணப் பரிமாற்றம்

Admin

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

புக்கிங் செய்த அரை மணி நேரத்தில் சிலிண்டர் டெலிவரி புதிய தட்கல் முறை அறிமுகம்

Admin

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Udhaya Baskar

தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு !

Udhaya Baskar

Leave a Comment