ஒன்றிய அரசுன்னு ஏன் சொல்றோம்னா? – எம்கேஎஸ்

Share

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தந்துள்ளார். 16வது சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசினார்.

அப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது ஏன் என வினவினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதை சிலர் சமூக குற்றம் என்று கூறுவதாக பேசிய மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே பயன்படுத்துவதாக என குறிப்பிட்டார். மேலும் ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்று குறிப்பிட்டார்.

1957ம் ஆண்டு திமுக-வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றியம் என்ற வார்த்தையை தாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம் என்ற விளக்கத்தையும் முதல்வர் தெரிவித்தார். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருப்பதால் மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத்தான் இனி பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், இந்தியா என்ற கருத்து முன்வைக்கப்படும் போது அதில் மாநிலமும் உள்ளடங்கியுள்ளது. ஒன்றிணைந்து செயல்படும் சூழல் உள்ள போது ஒன்றியம் என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்று வினவினார். இதற்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை. மாநிலங்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கியது தான் இந்தியா. ஆகவே அதன் அடிப்படையில் தான் ஒன்றியம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு மத்திய அரசு என்று தெரிவிக்காமல் ஒன்றிய அரசு என்று தெரிவிக்கிறது என்று விளக்கமளித்தார்.


Share

Related posts

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா

Admin

சென்னைக்கு வெள்ள ஆபத்து – இராமதாசு

Udhaya Baskar

புதிய தேசிய கல்விக் கொள்கை – தமிழக அரசு நாளை ஆலோசனை

Udhaya Baskar

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் சோடாக்கள்!?

Udhaya Baskar

குவைத் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

Udhaya Baskar

புதிய மாவட்டத்துக்கு மயிலாடுதுறை என பெயர் வைத்தால் மட்டும் போதுமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Admin

தமிழகத்தில் மேலும் 5875 பேருக்கு கொரோனா !

Udhaya Baskar

நீட் விவகாரத்தில் தமிழக அரசின் மவுனம் ஏன்? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Udhaya Baskar

Leave a Comment