கே.தங்கவேல் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Share

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.தங்கவேல் அவர்கள் மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு  துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து – தொழிலாளியாக – தொழிற்சங்கத் தலைவராக உயர்ந்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்றுபட்ட கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளராக 11 ஆண்டுகள் செயல்பட்ட அவர், மாநிலச் செயற்குழு உறுப்பினராவர். 

2011-16ல் திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற அவர் – மக்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். தொழிலாளர்களுக்காக திருப்பூரில் அவர் நடத்திய “127 நாட்கள்” நீண்டதொரு போராட்டம், இன்றும் குறிப்பிடத்தக்க தொழிலாளர் உரிமைப் போராட்டமாக இருக்கிறது.

அடித்தட்டு மக்களை – குறிப்பாக, தொழிலாளர் வர்க்கத்தைப் பாதிக்கும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சிந்தனையாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து தவிக்கிறது.

அவரை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது துணைவியார் திருமதி சாந்தி அவர்களுக்கும்

மற்றும் அவரது மகள்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Share

Related posts

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

பெண்கள் பாதுகாப்பிற்கு தனி நீதிமன்றம்-முக ஸ்டாலின்

Admin

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

ஆய்வுக்கு வந்த மத்திய குழு மீது விவசாயிகள் புகார்

Admin

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

Leave a Comment