“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

kalaignari kadaisi youtham
Share

முத்தமிழறிஞர் கலைஞர் மறைந்த போது மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கேட்டு தொடரப்பட்ட வழக்கை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற புத்தகத்தை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (6.8.2020) வெளியிட்டார்.

முன்னாள் முதல்வரும் – திமுக தலைவருமாக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி மறைந்த போது, தமிழக அரசு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்றிரவே இது தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

மெரினாவில் திமுக தலைவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை அவர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முத்தமிழறிஞர் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த தீர்ப்பை வழங்கியது.

இந்த வழக்கை மையமாகக் கொண்டு சன் நியூஸ் சிறப்புச் செய்தியாளரான D.ரமேஷ் குமார் “கலைஞரின் கடைசி யுத்தம்” என்ற புத்தகத்தை எழுதி இருந்தார். மேலும் சட்டத் துறையில் திமுகவின் போராட்டங்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த புத்தகத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் அணிந்துரை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (6.8.2020) சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞரின் கடைசி யுத்தம் புத்தகத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனை திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., மாநிலங்களவை திமுக உறுப்பினர் வில்சன், எம்.பி., மாநிலங்களவை உறுப்பினரும் – மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், சன்நியூஸ் சிறப்புச் செய்தியாளர் ஈவெரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


Share

Related posts

தமிழகத்தில் பஸ், ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

காய்கறி வாங்க கால் பண்ணுங்க – சென்னை மாநகராட்சி

Udhaya Baskar

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Admin

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

பழிவாங்கும் நடவடிக்கை வேண்டாம் – இபிஎஸ்-ஓபிஎஸ்

Udhaya Baskar

தேவையற்ற உணவு பழக்கங்களே நோய்களுக்கு காரணம்: கலெக்டர்

Admin

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

காதல் பிரச்சினை: 2 சிறுமிகளை கடத்திச்சென்ற என்ஜினீயரிங் மாணவர் கைது

Admin

Leave a Comment