முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Share

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி தேவையான மருத்துவ உதவிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பேட்டரி வீல் நாற்காலிகள் சர்விஸ் செய்ய சர்வீஸ் மையங்கள் வேண்டும். மாத உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,

தமிழகத்தில் மாற்று திறனாளிகள் பல்வேறு வகையில் உள்ளன அந்த வகையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பல்வகை ஊனம் கொண்டவர்கள். தமிழகத்தில் சுமார் 2500 பேர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மற்ற மாற்றுத்திறனாளிகள் போலல்லாமல் வாழ்க்கையில் பெரும் பகுதியை படுத்தே தான் இருக்க முடியும். வெளியே செல்ல வேண்டும் என்றால் வீல்சேரில் தான் செல்ல வேண்டும் சிறுநீரகம் மலம் போன்றவை டியூப் மூலமாக தான் வெளியேற்ற முடியும்.

இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பெரும் சவாலாக நிற்பது படுக்கை புண் நோய் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக இவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது கிடையாது. இதனால் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் தற்போது 250 பேர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக இவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும்.

மேலும் இவர்கள் வெளியே செல்வதற்காக தமிழக அரசாங்கம் 75 ஆயிரம் செலவில் பேட்டரி சக்கர நாற்காலிகள் வழங்கியது மூன்று ஆண்டுகள் வாரண்டி உடன் வழங்கப்பட்ட அந்த பெயர்கள் 80% தற்போது வரை பழுதான நிலையில் உள்ளது அவற்றை சரி செய்ய தமிழகம் முழுவதும் 6 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த முகவரியில் தேடிச் சென்று பார்த்தால் அப்படி ஒரு நிறுவனமே அங்கு இல்லை என்கிறார்கள்.

மேலும் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத உதவித்தொகை தமிழக அரசு 1,500 ரூபாய் வழங்கி வருகிறது அந்த உதவித் தொகை அவர்களுக்கு போதாத நிலை உள்ளது. ஆந்திராவில் வழங்குவது போல் குறைந்த பட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 படுக்கைகளுடன் கூடிய செயல் இல்லங்களை அமைத்து தர வேண்டும் என்பதும் இவர்களுடைய மிக முக்கியமான கோரிக்கையாக இருந்து வருகிறது. எனவே இவர்களை பல்வகை ஊனமுற்றவர்களாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.


Share

Related posts

பாலிவுட் பிரபலத்திற்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

சென்னை விமான நிலையத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Admin

test

Admin

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

பெண் கிடைக்காமல் விரக்தி ! திருநங்கையுடன் திருமணம் ! மாமன் மகன் மணவாளன் ஆன கதை !

Udhaya Baskar

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

Leave a Comment