முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Share

பாலியல் புகார் தொடர்பாக போலீசாரிடம் நாடுவதை தடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது வழக்கறிஞரிடம் சமரசம் பேசியதாக கூறியுள்ள நடிகை அதற்கான சிசிடிவி ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீது ஜூன் 9 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

நடிகையின் புகாரில் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கட்டாயக் கருக்கலைப்பு, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாடில் தன் மீதான புகாரில் உண்மை இல்லை என்றும், பணம் பறிப்பதற்காக நடக்கும் நாடகம் என்றும் மணிகண்டன் விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால் தான் சட்ட நடவடிக்கைக்கு செல்வதை தெரிந்து கொண்டு அதை தடுத்து நிறுத்த தனது வழக்கறிஞரிடம் முன்னாள் அமைச்சர் சமாதானம் பேசியதாக நடிகை கூறியுள்ளார். கடந்த மாதம் 23-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்து வழக்கறிஞரை மணிகண்டன் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ள நடிகை, அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் தனது வாட்ஸ் அப், டெலிகிராம் கணக்குகளை ஹேக் செய்து மணிகண்டன் தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள நடிகை இதற்காக ஒரு நபர் தன்னை சிபிஐ அதிகாரி எனக்கூறிக் கொண்டு இ-மெயில் மற்றும் பாஸ்வேர்ட் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

பரமேஸ்வரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்

Udhaya Baskar

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Rajeswari

பழமையான பொருட்கள் அரசுக்கே சொந்தமானது – அமைச்சர்

Admin

பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

ராஜராஜசோழன் காலத்து மகாவீரர் சிற்பம் – மதுரை அருகே பரபரப்பு !

Udhaya Baskar

கால்நடை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் டிசம்பர் 23ம் தேதி துவக்கம்

Admin

கொரோனா ஆபத்து முழுவதும் நீங்கவில்லை – சென்னை மாநகராட்சி

Admin

Leave a Comment