தமிழகத்தில் செப்டம்பரிலும் ஊரடங்கு? நாளை முதல்வர் முடிவு !

Share

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஆகஸ்ட் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டமாக பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் நாகை மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கற்றபின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என மீண்டும் விளக்கம் அளித்த முதலமைச்சர் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாகை வேதாரண்யத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கூறிய அவர், இதன் மூலம் 21 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதி அளித்தார். மேலும் யார், எங்கு செல்கிறார்கள் ? என தெரிந்து கொள்ள இ – பாஸ் முறை கட்டாயம் அவசியம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அரியர் பேப்பரில் பாஸ் என அறிவித்தது வாக்கு வங்கிக்காக அல்ல என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவர்களின் மன உளைச்சலுக்கு தீர்வு காணும் விதமாகவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தார்.


Share

Related posts

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

மே 24க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை வராது – முதல்வர் நம்பிக்கை

Udhaya Baskar

அ.இரகுமான்கான் படத்திற்கு திமுக தலைவர் மலரஞ்சலி

Udhaya Baskar

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

7 உறுதி மொழிகள் மக்கள் மனதில் பதிய வையுங்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

test news

Admin

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

Leave a Comment