என்னது ஸ்கூல் திறக்கறீங்களா? நாங்க புள்ளைங்கள அனுப்ப மாட்டோம்…

Share

ஒருவேளை சீக்கிரமாக பள்ளிகள் திறந்தாலும் பிள்ளைகளை அனுப்ப தயாரில்லை என பெரும்பாலான பெற்றோர்கள் தெரிவித்துள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கொரோனா உலகத்தையே அச்சுறுத்தி ஆட்டிப்படைத்த வியாதி. இதனால் உலகம் முழுவதும் நாடுகளும், மாநிலங்களும், நகரங்களும் தங்களுக்குத் தாங்களே பூட்டுப் போட்டுக் கொண்டு 6 மாதம் ஆகிவிட்டது. மாணவர்கள் பரிட்சை எழுதாமேலேயே பாஸ் அறிவித்தாகிவிட்டது. ஆனாலும் அடுத்த ஆண்டிற்கான கல்வி பயில பள்ளிகளில் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்க வேண்டும் என்றால் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியம். பொதுப் போக்குவரத்து வந்தால் கூட்ட நெரிசலில் கொரோனா பரவிவிடும் என்ற அச்சம்.

இந்நிலையில் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என சில மாநிலங்கள் முடிவெடுத்திருந்தாலும், சில மாநிலங்கள் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கலாம் என முடிவு செய்துள்ளன. இதற்கிடையே செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறந்தாலும் பிள்ளைகளை ரிஸ்க் எடுத்து அனுப்ப தயாரில்லை என 62 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும் ஆன்லைன் கல்வி, தொலைக்காட்சி, வானொலி உள்பட வேறு வழிகளில் கல்வி கற்பிக்க அரசு முயற்சி செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 23 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்புவோம் என்றும் 15 சதவீதம் முடிவெடிக்கவில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.

ஊரடங்கிற்கு பின்னர் என்ன செய்வீர்கள் என சிலரிடம் கேட்டபோது, 6 சதவீதம் மக்கள் மல்டிப்ளக்ஸ் மற்றும் தியேட்டர்களுக்குச் செல்வோம் என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ மற்றும் உள்ளூர் ரயில்களில் பயணம் செய்வோம் என 36 சதவீத மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Courtesy:
https://www.nationalheraldindia.com/india/covid-19-impact-62-parents-will-not-send-children-to-school-even-if-they-reopen


Share

Related posts

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

வனச்சரகர் வீட்டில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்

Admin

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

மனைவி இயற்கை எய்தினார்! தேம்பி அழுத ஓஎபிஎஸ்சுக்கு ஸ்டாலின் ஆறுதல்!

Udhaya Baskar

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

அருந்ததியர் இடஒதுக்கீடு – சமூக நீதியை காக்க வேண்டும் – திருமா.

Udhaya Baskar

குக்கிராமத்திற்கும் தடையில்லா மின்சாரம் ! திமுக அமைச்சர் ஏற்பாடு !

Udhaya Baskar

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

கனரா வங்கி மோசடி: ‘யுனிடெக்’ தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

Udhaya Baskar

ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் – முதல்வர்

Admin

இனி ஆகஸ்ட் 7 தேசிய ஈட்டி எறிதல் தினம்; நீரஜ் சோப்ரா நன்றி

Udhaya Baskar

Leave a Comment