மக்களை காப்பாற்ற கவிஞனாக மாறிய காவல் கண்காணிப்பாளர் !

ranipet dsp
Share

கொரோனா காலத்தில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்பதை உணர்த்துவதற்காக கவிஞனாக மாறிவிட்ட ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அதை மாவட்டம் முழுவதும் மக்களிடம் சென்று சேர்க்க அதற்கான பிரத்யேக வாகனத்தையும் துவக்கி வைத்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு இரவு பகல் பாராமல் பொதுமக்களை கண்காணித்து போதிய விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார், கொரோனா குறித்ததா விழிப்புணர்வு பாடல்களை தானே எழுதி கவிஞனாகவே மாறிவிட்டார்.

மேலும் அந்த பாடல்களை மாவட்டம் முழுவதும் ஒலிக்கச் செய்ய அதற்கான வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவருடைய வித்தியாசமான விழிப்புணர்வு சேவை அந்த மாவட்டத்தின் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேவில் கொராணா விழிப்புணர்வு வாசகம் இடம்பெறுகிறது.

டிஎஸ்பி சிவக்குமாரின் இந்த சேவையை சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த விழிப்புணர்வு பாடல்களை கேட்டாவது இனிமேல் மக்கள் அவசியமின்றி வரமாட்டார்கள் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Share

Related posts

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

தீயில் கருகிய ஸ்கூட்டர் ! புதிய ஸ்கூட்டி வழங்கி மு.க. ஸ்டாலின் அசத்தல் !

Udhaya Baskar

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Admin

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Udhaya Baskar

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- வைகோ

Admin

தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை – மு.க.அழகிரி

Admin

ரே‌ஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்

Admin

பள்ளிக்கூடம் கட்ட நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டி

Admin

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

Leave a Comment