ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Share

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயராக மாற்றி பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா பெயரில் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், விளையாட்டு துறையில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. சென்ற வருடம் இந்திய கிரிக்கெட் வீரா் ரோகித் சா்மா, மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகள் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29ம் தேதி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றி பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது இந்த விருது இனி, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்றழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் விருது என மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் விடுத்ததாகவும், அதானாலேயே கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என்றும் ட்விட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான் சந்த், 1926ம் ஆண்டு முதல் 1949ம் ஆண்டு வரை வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். 185 ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்துள்ளார். இவர் பங்கேற்ற 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றுள்ளது. தயான் சந்த் பிறந்த நாள் ஆகஸ்ட் 29 அன்று இந்திய தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப்படுகிறது.


Share

Related posts

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

மகாராஷ்டிராவில் ரசாயனம் பூசிய பேருந்துகள்

Rajeswari

ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Udhaya Baskar

ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு

Admin

சுனாமி பேரலை தாக்கி 16-ஆம் ஆண்டு நினைவு தினம்.. பொதுமக்கள் அஞ்சலி..

Admin

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர் – எச்.ராஜா விமர்சனம்

Admin

Cool தோனிக்கு கொரோனா இல்லை – துபாய் புறப்படுகிறார் !

Udhaya Baskar

தங்கம் விலை சவரனுக்கு 40 குறைவு

Rajeswari

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

கொரோனா 3ம் அலை குழந்தைகளை காக்க நடவடிக்கை

Udhaya Baskar

Leave a Comment