ராஜராஜசோழன் காலத்து மகாவீரர் சிற்பம் – மதுரை அருகே பரபரப்பு !

tholliyal
Share

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான மகாவீரர் சிற்பம் மற்றும் ராஜராஜசோழன் கால கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழ்வாராய்ச்சி போலவே மதுரை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் பல்வேறு தொல்லியல் எச்சங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

டி.கல்லுப்பட்டி அருகே காரைக்கேணி பகுதியில் உள்ள செங்கமேடு பகுதியில் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், சத்திரத்தின் சுவர்களிலும், அருகில் உள்ள கிணற்றின் சுவர்களிலும் ராஜராஜசோழனின் கல்வெட்டுகள் மற்றும் தமிழ் வட்டெழுத்துக்களைக் கண்டறிந்துள்ளனர்.

தூணில் உள்ள கல்வெட்டு ஒன்று ‘அரஹா’ என்று தொடங்குகிறது. அரஹா என்பதை சமஸ்கிருதத்தில் உள்ள அருகன் என் கொண்டால் இந்தப் பகுதி சமணப்பள்ளியாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலத்தில் உள்ளது. 3 சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல், சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளதாகவும், இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். பொதுவாக இயக்கிகளுடனே மகாவீரர் சிலை வடிக்கப்படும். ஆனால், இரண்டு பக்கமும் இயக்கர்களுடன் உள்ள இந்த மகாவீரர் சிலை அபூர்வமானதாகும். இந்தப் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொண்டால் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Share

Related posts

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – மருத்துவமனைகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை

Udhaya Baskar

கனமழை பெய்யப் போவுது; குடை, ரெயின்கோர்ட் வாங்கியாச்சா?

Udhaya Baskar

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

படகு சவாரிக் கட்டணம் குறைப்பு; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

Udhaya Baskar

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!?

Udhaya Baskar

ஊருக்கே உணவு அளித்தவர்கள் பட்டினி… உதவிக்கரம் நீட்டிய சமையல் கலைஞர்கள்

Udhaya Baskar

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

முட்டை விலை 55 காசுகள் குறைவு

Rajeswari

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

Leave a Comment