தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Share

ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் ஒருவர் சொத்து முழுவதும் அபகரித்துக்கொண்டு தாயை தவிக்க விட்டதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் வசித்து வரும் மங்கையர்க்கரசி என்பவர் கணவரை இழந்தவர். இவர் ஆயுதப்படையில் காவலராக உள்ள மகன் கோபிநாத் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் தனக்கு கடன் தொல்லை இருப்பதாக கூறிய கோபிநாத் தாயின் இரக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவர் பெயரிலிருந்த மனையை தன் பெயருக்கு எழுதி வாங்கி, ரூ. 8 லட்சத்துக்கு விற்று விட்டார். அந்தப் பணம் கைக்கு கிடைத்தவுடன் எப்படியாவது தாயை விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தினமும் மங்கையர்க்கரசியிடம் வீணாக வம்பிழுத்து சண்டை போட்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி 10 மாதம் சுமந்து பெற்ற தாயை லத்தியால் அடித்தும் காலால் எட்டி உதைத்தும் வீட்டை விட்டு விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கணவரை இழந்த மங்கையர்க்கரசி தற்போது சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், மங்கையர்க்கரசியின் ரிசர்வ் படை காவலராக இருப்பதால் காவல்நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சொந்த வீட்டிற்கு வெளியே வீதியில் தங்கி உள்ளார் மங்கையர்க்கரசி.

“வீட்டு மனை விற்ற பணத்தையாவது தந்தால் வாடகைக்கு வீடு பார்த்துக் கொள்வேன்” என போலீஸாரிடம் மங்கையர்க்கரசி கூறியுள்ளார். காவல்துறை நண்பன் என்பது ஊர் மக்களுக்காக மட்டும்தானா? பெற்ற தாய்க்கு இல்லையா என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Share

Related posts

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

சென்னையில் 2வது விமான நிலைய பணிகளை உடனே தொடங்குக!

Udhaya Baskar

தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

தைப்பூச விடுமுறை அறிவித்த முதல்வருக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Admin

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

Leave a Comment