உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு

Share

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சிர்பதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டில் இருந்த இரும்பு சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் குழந்தை சிறிது நேரத்தில் மயங்கியது.ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 36 மணிநேர தொடர் சிகிச்சைக்கு பிறகு குழந்தை பவ்யா தற்போது, உடல் நிலை முன்னேற்றம் அடைந்து மிகவும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Share

Related posts

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

“இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனையா..!?”

Udhaya Baskar

பூசாரிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை

Udhaya Baskar

அணையா தீபம்! பெண் உருவத்தில் விநாயகர்! சுசீந்திரத்தில்!

Udhaya Baskar

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி

Udhaya Baskar

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

Udhaya Baskar

Leave a Comment