OTT’யில் பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’?

Share

பிரபுதேவாவின் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவிவருகின்றது.

ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும், இப்படத்தில் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடித்துள்ளார். பிரபு தேவாவிற்கு ஜோடியாக இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்ட ஐஜி பொன் மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கைகள் மேல் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனது படத்திற்குச் சூட்டி பரபர படப்பிடிப்பை துவங்கினார் பிரபுதேவா.

ஆனால், படத்தின் அனைத்து பணிகள் நிறைவடைந்து இரண்டு வருடங்களாக வெளியாகாமல் இருக்கிறது “பொன் மாணிக்கவேல்” படம். கடந்த வருடம் வெளியாகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்புடன் வந்தாலும் நிதி சிக்கலால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பொன் மாணிக்கவேல் வெளியாகவிருக்கிறது என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வரும் என்று சொல்லப்படுகிறது.


Share

Related posts

இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Udhaya Baskar

பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Udhaya Baskar

போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Udhaya Baskar

கோவா திரைப்பட விழாவுக்கு தேர்வான நடிகர் தனுஷ் படம்

Admin

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி பி.சி. ஸ்ரீராம் ட்வீட்

Udhaya Baskar

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

விஜய் சேதுபதியின் “மாஸ்டர் செஃப்” ஆகஸ்ட் 7 முதல்

Udhaya Baskar

Popstar தனுஷ்!!! பாராட்டிய சந்தோஷ்…

Udhaya Baskar

திரையரங்குள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

Admin

ஜனவரி 10ஆம் தேதி வரை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

Admin

கனவு ஹீரோக்களின் ரியல் மார்க்ஸ் ! சாய்பல்லவி ஃபர்ஸ்ட் ! ரவிதேஜா லாஸ்ட் !

Udhaya Baskar

Leave a Comment