பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

teacher rajagopalan
Share

சென்னையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, ஆசிரியர் பணி செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் நோய் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கும் வேளையில் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் இணைய வழியிலேயே மாணவியரிடம் தவறாக நடந்து கொண்ட செயல் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

நல்லொழுக்கத்தை கற்றுத் தந்து, சிறந்த எதிர்கால தலைமுறையை உருவாக்குகின்ற ஆசிரியரே இது போன்ற கீழ்த்தரமான செயலை செய்திருப்பதும், ஆசிரியர்-மாணவர்கள் என்கிற பந்தத்தை கடந்து அநாகரீகமாக செயல்பட்டு, இணைய வழியில் பாலியல் தொந்தரவு அளித்து வேலியே பயிரை மேய்ந்த கதையாக செயல்பட்டு ஆசிரியர் சமுதாயத்திற்கு இழுக்கை ஏற்படுத்திய ராஜகோபாலனின் செயலை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வன்மையாகக் கண்டிக்கிறது.

நல்ல சமுதாயம் உருவாகவும், சிறந்த சமுதாயத்தை படைத்திடவும் நல்லாசிரியர்களின் பங்கு மிக முக்கியமான தேவையாகும். அதே சமயம் ஆசிரியர் சமுதாயத்தில் கலந்திருக்கும் ராஜகோபாலன் போன்ற ஆபத்தான வைரஸ் களைகளை களையெடுத்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு ஏற்படவிருக்கும் அவப்பெயரை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

கடந்த காலங்களில் ஒரு அரசு எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்யாமல், எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்ததால் வந்தது தான் இது போன்ற களைகள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சேவையாக செய்ய வேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் வணிகமாக்கி அதனை தனியாருக்கு தாரை வார்த்ததால் அமிர்தமாய் இருக்க வேண்டிய கல்வித்துறையில் இன்று நஞ்சு கலக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஓராண்டாக கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு இணைய வழியில் மாணவச் செல்வங்களுக்கு பாடம் கற்பிக்கும் போதே இது போன்று தவறான முறையில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆசிரியர் பள்ளியில் பாடம் கற்பித்த போது மாணவியரிடம் எப்படி நடந்திருப்பாரோ..? என்பதை நினைக்கையில் நெஞ்சம் நடுங்குகிறது.

பெண் பிள்ளைகளை பொறுத்தவரை ஆசிரியப் பெருமக்களும் மற்றொரு பெற்றோர் என்றெண்ணி பழகும் போதே இது போன்ற தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவோர் இச்சமுதாயத்தில் வாழவே தகுதியற்றவர்.

எனவே பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி தொடர்புடைய விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாய் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கலாகாது. மேலிடத்தின் பரிந்துரை என்கிற பெயரில் நடவடிக்கைகளை தாமதப்படுத்தவும் கூடாது. தவறிழைத்த #பத்மா_சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அவர் எதிர்காலத்தில் மாணவச் செல்வங்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் பணியை செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.


Share

Related posts

புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

Admin

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகளை உடனே வழங்குக ! – உயர்நீதிமன்றம்

Udhaya Baskar

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Udhaya Baskar

வனத்தில் யானை-யை ரசித்துப் பார்த்த புலி

Admin

மாதர்களுக்கு உகந்த பழம் மாதுளை பழம்

Udhaya Baskar

மக்களை காப்பாற்ற கவிஞனாக மாறிய காவல் கண்காணிப்பாளர் !

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் பிரார்த்தனை!

Udhaya Baskar

Leave a Comment