பால் முகவர்களுக்கு சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தல்

Share

பால் விநியோகம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு நமது உடல் நலமும் முக்கியம், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பிற்கினிய பால் முகவர்களே, பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களே, நம்மோடு இரண்டற பின்னிப் பிணைந்திருக்கும் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களே வணக்கம்.

கொரனாவெனும் கொடிய அரக்கன் இந்தியாவை ஆட்டிப் படைக்க தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையில், இரண்டாவது அலை உருவாகி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதையும், செல்லும் வழியெங்கும் ஆம்புலன்ஸ் கதறிக் கொண்டு செல்வதையும், மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ஆக்சிஜனும், மருந்துகளும் தட்டுப்பாடாகி வருவதையும், அதன் காரணமாக மனித உயிர்கள் கொத்துக், கொத்தாக மடிந்து போய் மயானங்களில் புதைக்கவும், எரியூடடவும் இடமின்றி மக்கள் கதறுவதை காண்கையில் நெஞ்சம் பதைபதைத்துப் போய் தான் இந்த மடலை எழுதுகிறேன்.

அடைமழை, வெள்ளப் பெருக்கு, சூறாவளி புயல் என இயற்கை பேரிடர் காலங்களிலேயே நமது உடல்நலன் குறித்தோ, உயிர் பாதுகாப்பு குறித்தோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், சிறிதளவு கூட அச்சப்படாமல் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யும் பணியை செவ்வனே செய்து வந்த நாம் தற்போது கொரோனா நோய் தொற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ள உலகமே வீடுகளுக்குள் முடங்கிப் போய் கிடக்கும் நேரத்தில் மட்டும் சுயநலமாய் இருந்து விடாமல் வழக்கம் போல் மக்கள் நலப்பணியில் மனநிறைவைக் கண் நமது பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறோம்.

வழக்கமான பேரிடர் காலங்கள் போல இந்த கொரோனா நோய் தொற்று காலத்தையும் கருதி மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் மெத்தனமாக செயல்பட்டு வந்ததால் இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நமது உறவுகளை அந்நோய் தொற்றுக்கு பலி கொடுத்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வேதனையில் நெஞ்சம் விம்ம, துக்கத்தால் தொண்டை அடைக்க பலியான பால்வளத்துறை சார்ந்த நம் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லவும், உதவிக்கரம் நீட்டவும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறேன்.

கொரோனா நோய் தொற்று காலத்தில் முன்களப்பணியாளர்களாக சிறப்பான முறையில் செயலாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போல் மக்களோடு மக்களாக நித்தமும் நெருங்கிப் பழகும் நமக்கான பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அழுத குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் ஆனால் நம்மால் அழக்கூட இயலாதவர்களாகவே நாம் இருந்து வருவதால் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் நம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் நடத்தி வந்துள்ளனர். எனவே தான் கடந்த ஓராண்டாக பால்வளத்துறை சார்ந்த உறவுகள் பலரை நாம் இழந்திருந்தும் அது ஊடக வெளிச்சத்திற்கு வராமலும், அரசின் கவனத்திற்கு செல்லாமலும் மறக்கடிக்கப்பட்டுப் போனது.

அதிலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிதீவிரமாக பரவி வரும் சூழலில் நமக்கு நாமே திட்டம் போல் நம்மையும், நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஏனெனில் மருத்துவம், காவல், தூய்மைப் பணி இவர்களுக்கு அடுத்து மக்களோடு மக்களாக மிகவும் நெருக்கமாக இருப்பதும், தினசரி மக்களோடு நகமும், சதையுமாக இணைந்து பயணிப்பதும் பால் முகவர்களாகிய நாமும், பத்திரிகை தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் செய்தியாளர்களும் தான். அந்த நெருக்கம் தான் தற்போது நமக்குள் கூடுதல் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்வது எந்த அளவிற்கு முக்கியமோ அதற்கு இணையாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த அனைவரது குடும்பத்தினரின் உடல்நலமும், பாதுகாப்பும் மிக, மிக முக்கியமானதாகும். “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்பதை போல பால் முகவர்கள் அனைவரும் நலமுடன் இருந்தால் தான் பொதுமக்களுக்கு நம்மால் தொடர்ந்து தங்குதடையற்ற சேவையை வழங்கிட முடியும்.

அதற்கு சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அவர்களோடு பின்னிப் பிணைந்திருக்கும் தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரின் உடல்நலமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகமல் இருக்க உரிய பாதுகாப்பு நடைமுறைகளை நாம் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டியது கண்டிப்பாக அவசியமாகும்.

நாம் அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதும், வெளியில் செல்லும் இடங்களில் மட்டுமில்லாமல் நமது பால் விநியோக மையங்களிலும் போதுமான சமூக இடைவெளியை முறையாக பின்பற்றியும், அரசு விதிக்கும் விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடித்தும் செயல்படுவதோடு, பால் விநியோகம் முடித்து விட்டு வீட்டிற்குள் செல்லும் முன் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீரை பயன்படுத்தி கை, கால்களை சோப்போ அல்லது சானிடைசரோ பயன்படுத்தி நன்றாக கழுவிய பிறகு உள்ளே செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி அந்நோய் தொற்று வெப்பநிலையை விட குளிர் நிலையில் அதிகளவில் தாக்குதலை தரும் என்பதால் நம்மில் அனைவரும் முடிந்த வரை குளிர்பானங்களையும், குளிர் நிலையில் உள்ள குடிநீர் அருந்துவதையும், குளிர்சாதன வசதி உள்ள அறைகளில் தங்குவதையும், அவ்வாறான வாகனங்களில் பயணிப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கபசுர குடிநீர் அருந்துவது நமக்கு கூடுதல் பலமளிக்கும்.

மேலும் கொரனாவெனும் கொடிய அரக்கன் ஏழை, பணக்காரன், முன்களப்பணியாளர், சாதாரண பணியாளர், வணிகர், மக்கள் சேவகர், வெளியே சுற்றுபவர், வீட்டில் இருப்பவர் என்கிற பாகுபாடின்றி அனைவரையும் பீடித்து வருவதை பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் தொடர்ந்து பார்த்தும், படித்தும் வருகிறோம்.

எந்த ஒரு நோயாக இருந்தாலும் அது வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பதே சாலச்சிறந்தது. எனவே நாம் அனைவரும் கவனமுடன் இருந்து நம்மையும், நமது குடும்பத்தினரையும் தற்காத்துக் கொள்வதோடு மக்கள் நலப் பணிகளையும் தடையின்றி செய்வோம்.

மனிதம் தழைக்க மனிதநேயத்தோடு செயல்படுவோம் என தனது அறிக்கையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.


Share

Related posts

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

யானையின் காதில் தீ வைத்த கொடூரம்

Admin

Coca-Cola பாட்டில்களை அகற்றியா ரொனால்டோ, தண்ணீர் குடியுங்கள் என சமிக்கை!

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

Admin

புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விவரம்

Udhaya Baskar

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Udhaya Baskar

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

Admin

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment