பொன்னியின் செல்வனும், வந்தியத்தேவனும் ! PS1 படத்தின் அப்டேட்!

Share

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார். புகழின் உச்சிக்கே சென்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக கொண்டதுதான் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த சினிமாவில் சீயான் விக்ரம் (ஆதித்ய கரிகாலன்), ஐஸ்வர்யா ராய் (நந்தினி மற்றும் மந்தாகினி தேவி), சாரா அர்ஜூன் (இளம் வயது நந்தினி), திரிஷா (குந்தவி), கார்த்தி (வல்லவராயன் வந்தியதேவன்), ஜெயம் ரவி (அருள்மொழி வர்மனாக பொன்னியின் செல்வன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), ஜெயராம் (ஆழ்வார்க்கடியான் நம்பி), பிரபு (அனிருதா பிரம்மராயர்), அஸ்வர்யா லட்சுமி (பூங்குழலி), சோபிதா துலிபலா (வானதி), ஆர். சரத்குமார் (பெரிய பழுவேட்டரையர்), ஆர். பார்த்திபன் (சின்ன பழுவேட்டரையராக கலந்தக்க கந்தன்), பிரகாஷ் ராஜ் (சுந்தர சோழர்), ரகுமான் (மதுராந்தகன்), கிஷோர் (ரவி தாசன்), அஸ்வின் (கந்தமாறன்), அர்ஜூன் சிதம்பரம் (வராங்குன பாண்டியன்), நிழல்கள் ரவி (கடம்பூர் சம்புவராயர்), ரியாஸ் கான் (சோமன் சாம்பவன்), லால் (திருக்கோவிலூர் மன்னன் மலையான், மோகன் ராமன் (குடந்தை ஜோதிடர்), பாலாஜி சக்திவேல், மாஸ்டர் ராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் பொ.செ. படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முழு வீச்சில் நடந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் எடுக்கப்பட்டு, தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா நகருக்கு சென்றுள்ளது.

இதற்கிடையே தான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக நடிகர் ஜெயம் ரவி அறிவித்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைரக்டர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் “தலைமையும் கற்றலும் ஒருவருக்கொருவர் இன்றிய அமையாதது. நீங்கள் மிகத் துல்லியமாக இந்த மகத்தான வேலையை வழிநடத்துவதை பார்ப்பது வாழ்நாள் அனுபவமாக இருந்தது என்றும் உங்கள் ஆசீர்வாதம், உங்கள் நகைச்சுவை, உங்கள் அக்கறையான இயல்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக என்னை நம்பியதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். உங்களுடன் மீண்டும் பணிபுரியும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன். இவை அனைத்தும் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் காணும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள். என்றென்றும் உங்கள் பொன்னியின் செல்வன்”, என கூறியுள்ளார்.

இதை படித்த பின் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவிக்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

இளவரசே அதற்குள் நீங்கள் விடைபெற முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்னும் 6 நாளில் வடக்கில் வேலைகளை முடித்து தெற்கில் வந்தடைவோம். – வந்தியத்தேவன் ” என்று டிவிட் செய்துள்ளார். அதான் இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் வந்தியத்தேவன் என்பதை கார்த்தி உறுதி செய்துள்ளார்.

இப்படி கார்த்தி டிவிட் செய்ததை ரசிகர்கள் பார்த்து ஆரவாரம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் ராஜ ராஜசோழனாக (அருள் மொழிவர்மன் மற்றும் பொன்னியின் செல்வன்) ஜெயம் ரவி நடித்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர வாய்ப்பிருக்கிறது. இந்த படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக உள்ளார்.


Share

Related posts

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பாஜக துணைத் தலைவர் பதவி!

Udhaya Baskar

அதிமுகவில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு – கே.பி.முனுசாமி

Admin

மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றார் சுஷில்குமார் மோடி

Udhaya Baskar

மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! – இராமதாசு

Udhaya Baskar

அன்னையர் தின வாழ்த்து – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

விமானக் கட்டணம் உயர்வு; அமெரிக்க மாப்பிள்ளைகள் அதிர்ச்சி!

Udhaya Baskar

குக்கிராமத்திற்கும் தடையில்லா மின்சாரம் ! திமுக அமைச்சர் ஏற்பாடு !

Udhaya Baskar

பிரிட்டனில் அதிகரித்து வருகிறது கொரோனா

Admin

Leave a Comment