மாதர்களுக்கு உகந்த பழம் மாதுளை பழம்

Share

மாதுளைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. மாதுளையைப் `பழங்களின் ராணி’ என்கிறார்கள். ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன என்பதுதான் அதற்குக் காரணம்.

இதில் எண்ணற்ற வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்திருப்பதால் சீரான இரத்த ஓட்டத்தை தரும்.விந்தணுக்களின் உற்பத்தியையும் இது அதிகரிக்கும். உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.

இன்று பல கணவர் மனைவிக்கு இருக்கும் பிரச்னை குழந்தை கருவுறுதலில் ஏற்படும் சிக்கல்கள்தான். அதனால்தான் சமீப காலமாக லாபம் காண்கின்றன கருத்தரித்தல் மையங்கள். மாதுளையை தினமும் உட்கொள்வது கரு தங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதில் மாதுளம் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது.

மாதுளைக்கு மருத்துவமனையில் தொடங்கி மணவறை வரை தனி இடம் தரப்பட்டிருக்கிறது. பண்டைய எகிப்து நாகரிகத்தில், மாதுளையை செழிப்புக்கான குறியீடாகக் குறிப்பிட்டுள்ளனர். மாதுளை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிப்பது மட்டுமன்றி இரட்டிப்பாக்குகிறது. கருப்பையையும் வலுப்பெறச் செய்கிறது.

இந்தியாவில், வருடத்துக்கு சுமார் 28 லட்சம் டன் மாதுளைகள் விளைவிக்கப்படுகின்றன. வருடம் முழுவதும் விளையக்கூடிய மாதுளை. வெப்ப மண்டல நாடு என்பதால் இந்தியா மாதுளையைத் தனதாக்கிக்கொண்டிருக்கிறது.

மாதுளையில் கணேஷ், காபூல், மிர்துளா, பஹாவா என்று பல ரகங்கள் உள்ளன. ஆனாலும், பெரும்பான்மையான மக்களுக்குப் பிடித்தது, ‘கணேஷ்’ வகை மாதுளையே. இதை வெள்ளை மாதுளை அல்லது நாட்டு மாதுளை என்கிறார்கள். சித்த மருத்துவம் பரிந்துரைப்பதும் இந்த வகை மாதுளைதான் என்றாலும், தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் காணப்படுவது காபூல் ரக மாதுளையே.

எளிதில் வெடிப்பு விழுந்து அழுகிவிடும் என்பதாலும் பெரும்பாலானோர் கண்ணுக்கு அழகான சிவந்த காபூல் ரக வகை மாதுளையையே விரும்பி வாங்குவதாலும், நாட்டு ரக மாதுளையை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. இதனாலேயே, தமிழகத்தில் நாட்டு மாதுளைப்பழங்கள் வகை, மாதுளையாக மாறிக்கொண்டிருக்கின்றன. `பார்வைக்கு அழகாக, ஆப்பிள் போல இளஞ்சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் காபூல் ரக மாதுளை ஆரோக்கியத்துக்குக் கேடு’ என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்…’ என்பது சித்தர்களின் வாக்கு. அதன்படி, அந்தந்தப் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகளை அந்தப் பகுதி மக்கள் உண்ண வேண்டும். அப்படித்தான் இயற்கை நம்மைப் படைத்திருக்கிறது. அதற்குக் காரணம், அந்தப் பகுதியின் தட்பவெப்ப சூழல்தான். இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களை உண்டு வாழும்போது, நோய் நொடியின்றி வாழலாம்.

மாதுளை என்றால், ‘வெள்ளை மாதுளை’ என்று அழைக்கப்படும் நாட்டு மாதுளைதான். சித்தர்களின் பாடல்களில் மாது உளம் பழம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மாதர்களுக்கு உகந்த பழம்’ என்று அதன் பெயரிலேயே அடங்கியிருக்கிறது. மாதுளைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. கருப்பையை வலுவாக்கும் என்பது அதன் சிறப்புக் குணம். மற்ற பழங்களுக்கும் மாதுளைக்கும் வேறுபாடு உண்டு. இதில், துவர்ப்புச் சுவையோடு இனிப்பும் கலந்திருக்கும். இதிலுள்ள துவர்ப்பே மாதுளையின் சிறப்பு. சித்த மருத்துவம், `ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவையானது உடலை உரமாக்கக்கூடியது’ என்று குறிப்பிடுகிறது. இந்த மாதுளையை விதையுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.

இந்தப் பழத்திலுள்ள துவர்ப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப்புண்ணை ஆற்றும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும், ரத்தசோகையைப் போக்கும். பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெள்ளை மாதுளைக்கு உண்டு.

மாதுளம் பழம் மட்டுமன்றி அதன் தோலிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.

மாதுளம் பழத்தின் தோலுக்கு அடியில் மஞசள் நிறத்தில் காணப்படும் ஜவ்வுபோன்ற பகுதி, மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. இதைக் காயவைத்து, பொடியாக்கிப் பயன்படுத்தலாம். சீதபேதி, கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.

மாதுளை தோலை காய வைத்து தூளாக்கி, அதை தண்ணீரில் கலந்து வாய் நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில், பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மாதுளை தோல் உதவும். எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அதன் அடர்த்தியை அதிகரிப்பதற்கும் மாதுளை தோல் சிறந்தது. ஏனெனில் இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்டுள்ளது. மெனோபாஸ்
கொப்பளிக்க, வாய் துர்நாற்றத்திலிருந்து நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கும் இது உதவியாக இருக்கும். மாதுளை தோல் சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைக்க உதவுகிறது, முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தவிர்க்கிறது.

மாதுளம் பழத்தில் பல்வேறு விதமான ஊட்டச்சத்து க்கள் கொட்டிக் சத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இந்தப் பழங்கள் ஏற்றது. மாதுளம் பழத்தை உட்கொள்வதால் நினைவாற்றலும், கற்கும் திறனும் அதிகரிக்கிறது. எனவே,கிடக்கின்றன. ஃபைபர் போலேட், விட்டமின் சி விட்டமின் கே, பொட்டாசியம் முதலிய குழந்தைகளுக்குப் போதிய அளவு மாதுளம் பழங்களைச் சாப்பிடக் கொடுப்பது நல்லது.

மாதுளை பழங்கள் தொடர்ந்து உட்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. அதனால் பெண்கள் தங்கள் உணவில் மாதுளை

பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.மாதுளை முத்துக்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கப் பெரிதும் உதவுகிறது. ரத்த சோகை போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மாதுளை உதவும். ஆண்களின் பிறப்புறுப்புகளில் ஏற்பட கூடிய இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்த மாதுளை சிறந்த மருந்தாக உள்ளது.

இதனால் தாம்பத்தியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். அத்துடன் விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விரைவிலே கருத்தரிக்க மாதுளை உதவும். பாலுணர்வை தூண்ட மாதுளையை சாப்பிட்டு வந்தாலே போதும். இதில் உள்ள பலவித சத்துக்கள் சிறப்பான முறையில் செயல்பட உதவும். உடலுறவு வைத்து கொள்ளும் நாட்களில் ஆணும் பெண்ணும் மாதுளையை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் சிறப்பான தாம்பத்தியம் இருவருக்குள்ளும் அரங்கேறும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது மிக விரைவிலே கருத்தரிக்க உதவும் எனவும் கூறப்படுகிறது. கர்ப்பகால நீரிழிவு நோய்ப் பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை உட்கொள்வது நல்லதல்ல. இதில் நிறைந்துள்ள இனிப்புச் சத்து நீரிழிவுசார்ந்த நோயை இன்னும் மோசமாக்கும். ரத்த அழுத்தம் குறைவாக உள்ள நபர்கள் மாதுளம் பழங்களைச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை. அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்போர் மாதுளையைத் தொடவே கூடாது.

நம்மூரிலுள்ள வெள்ளை மாதுளை, அழகிலும் நிறத்திலும் சற்று குறைவாக இருந்தாலும், அவைதான் நாம் சாப்பிட ஏற்றவை. அந்தப் பழங்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உடல் நலத்துக்கும் உகந்தது. அத்தகைய வெள்ளை மாதுளை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்பட வேண்டும். இவ்வகையான மாதுளைகள் மிகக் குறைவாகவே பயிரிடப்படுகின்றன. இவை அதிகரிக்கப்பட வேண்டும்.


Share

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் 1 – துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

புத்தாண்டு நள்ளிரவில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது

Admin

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

முதுகுத் தண்டுவடம் பாதித்தோருக்கு மருத்துவ உதவி தேவை!

Udhaya Baskar

ஆன்லைனில் படித்தே ஆகவேண்டும்; பப்ஜி ஆட முடியாது; ஐகோர்ட் தீர்ப்பால் சோகம் !

Udhaya Baskar

150 ஆண்டுகள் சேவை செய்த புளியமரம் ! சூறாவளிக் காற்றில் சுருண்டு விழுந்தது !

Udhaya Baskar

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

நரிக்குறவர்களின் பசியாற்றும் தாசில்தார் !

Udhaya Baskar

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

Leave a Comment