தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

liquor in tomoto van
Share

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு வாகனத்தில் மதுபானம் கடத்தி வந்தவர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மதுபிரியர்கள் மது அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பிளாக்கிலாவது சரக்கு கிடைக்குமா என்று தவித்து வருகின்றனர்.

இவர்களது தவிப்பை போக்கும் வகையில் சிலர் சட்டவிரோதமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்களை கடத்தி வந்து தமிழகத்தில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

ஊரடங்கு என்பதால் மதுபானங்களை காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களில் மதுபானம் கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆற்காடு புறவழிச்சாலையில் தனியார் கல்லூரி எதிரே ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர வாகன  தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே தக்காளி மற்றும் காய்கறி ஏற்றி வந்த 3 சரக்கு வாகனங்களை சோதனை செய்தபோது அதில் சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கர்நாடக மாநில மதுபான புட்டிகள் 1,920 இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மதுபானம் கடத்தியதற்கு பயன்படுத்திய 3 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் வேன் உரிமையாளர் பாலாஜி மற்றும் ஓட்டுநர் விஜய், சங்கர் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் காய்கறி ஏற்றிச் செல்வது போல் வழியில் அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசாரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

மேலும் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரும் மதுபானங்களை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் விற்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்தவர்கள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் அப்பகுதி மதுபிரியர்கள் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளனர்.


Share

Related posts

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் துவங்கியது

Admin

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சென்னை பல்கலை.யில் தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து – பா.ம.க. நிறுவனர் வரவேற்பு

Udhaya Baskar

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

இனி 8 போடாமல் ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்

Udhaya Baskar

அப்பா மாதிரி கோமாளி ஆக மாட்டேன் ! கலெக்டர் ஆவேன் – நகைச்சுவை மன்னன் மகன் சீரியஸ் !

Udhaya Baskar

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

முழு காரணமும் இந்தியா தான்! சீனாவின் அறிக்கை

Udhaya Baskar

ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான பணம் கருகியது

Admin

Leave a Comment