“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Share

ஆபாசமாக பேசியதாக சர்ச்சையான பப்ஜி “மதன் OP” என்கிற மதனின் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை.

பப்ஜி விளையாட்டை விபிஎன் முறையில் டவுன்லோடு செய்து அதை இணையத்தில் வெளியிட்டு 8 லட்சம் பேரை தன் பக்கம் கவர்ந்த பப்ஜி மதன். தடை செய்யப்பட்ட விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி இணையத்தில் பதிவேற்றியதோடு பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாக சர்ச்சையான யூட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு லைவ் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்கான டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் ‘மதன்’ எனும் யு-டியூப் சேனலை நடத்தி வருபவர் மதன் என்கிற இளைஞர். ஆரம்பத்தில் இவரது ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்த ஒரு சில மோசமான வரவேற்பு, ‘டாக்ஸிக் மதன் 18+’ என்கிற மற்றொரு யூ-டியூப் சேனலை தொடங்குவதற்கும் அடித்தளம் அமைத்தது.

இந்த யூ-டியூப் சேனல்களில் இவர் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சமாக இருக்கின்றன. தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் மதன். அதிலும், பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில், மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் மதன் தலைமறைவாகியுள்ளார். இதை தொடர்ந்து அவனது பெற்றோரிடம் மதனை பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் அவனை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.


Share

Related posts

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

கொரோனா பரவலை தடுக்க வாகன சோதனை

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் விளக்கம்

Admin

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Udhaya Baskar

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை: ராதாகிருஷ்ணன்

Admin

குடியை கெடுக்கும் ஆன்லைன் லாட்டரி ! குற்றவாளிகள் கைது !

Udhaya Baskar

முன்ஜாமீன் மனு தள்ளுபடி… கைதாவாரா முன்னாள் அமைச்சர் மணிகண்டன்???

Udhaya Baskar

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

Leave a Comment