சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Share

சாத்தான் குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவம் போலவே நியூயார்க்கில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில் காவல்துறையினரால் கருப்பின இளைஞர் ஒருவர் கொடுரமாக கொல்லப்பட்ட வீடியோவை அந்த இளைஞரின் குடும்பத்தினர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

நியூயார்க்கில் மார்ச் 23ல் கருப்பின இளைஞரான டேனியல் ப்ரூட் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு மார்ச் 30ல் இறந்து போனார். இந் நிலையில், டெனியல் ப்ரூட்டின் குடும்பத்தினர் நேற்று நியூயார்க்கில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில், போலீஸார் மத்தியில் டேனியல் ப்ரூட் நிர்வாணமாக நிற்கிறார். அவரின் கை பின்னால் கட்டப்பட்டுள்ளது. போலீஸார் ஒருவர் பிளாஸ்டிக்பை போன்ற பொருளால் டேனியலின் முகத்தை மூடுவது போன்ற காட்சிகள் அதில் உள்ளன.

தன் முகத்தில் மூடப்பட்ட ஸ்பிட்கூட்டை அகற்ற டேனியல் ப்ரூட் முயற்சி செய்ததால் போலீஸார் அவரின் முகத்தை பிடித்து சாலையில் அடித்ததில் படுகாயம் அடைகிறார். இந்த சம்பவத்தால் ப்ரூட் பலத்த காயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார்.

டேனியல் ப்ரூட் காணாமல் போனதாக அவரது சகோதரர் போலிசாருக்கு தெரிவித்த நிலையில் அவரை நியூயார்க் நகரின் மேற்கு பகுதியில் உள்ள ரோசஸ்டர் என்ற இடத்தில் காவல்துறையினரி கண்டுபிடித்தனர்.

அவர் மன நிலை பாதித்தவர் என்று யோசிக்காமல் போலீசார் இந்த தாக்குதல் நடத்தி உள்ளனர். டேனியல் ப்ரூட்டின் மரணம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதால் அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

Related posts

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

தமிழகத்தில் புதிய மாவட்டமானது மயிலாடுதுறை

Admin

ஸ்டாலின் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாலும் அதனை முறியடிப்போம் – முதல்வர்

Admin

Udhaya News உங்கள் செல்போனில்!

Udhaya Baskar

தாலிதான் எனக்கு வேலி-வெள்ளைப் புடவையுடன் வனிதா செல்ஃபி!

Udhaya Baskar

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

இளைஞர்களால் வேகமாக பரவுகிறது கொரோனா ! WHO எச்சரிக்கை !

Udhaya Baskar

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

Leave a Comment