பாமக சார்பில் சமூகநீதி வாரம்- G.K மணி

Share

பா.ம.க சார்பில் செப்டம்பர் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை சமூகநீதி வாரமாக கடைப்பிடிக்கப்படும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதில் சமூகநீதி குறித்து ஒவ்வொரு நாளும் சமூகநீதி உரைகள் மற்றும் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 13-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி சனிக்கிழமை வரையிலான வாரம் சமூகநீதி வாரமாக கடைபிடிக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1987-ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; வன்னியர் மக்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், சமூகநீதி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சமூகநீதி வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் சமூகநீதி வாரத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். ஒட்டுமொத்த சமூகநீதி வார நிகழ்வுகளுக்கும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். கருத்துரைகள், வீரவணக்கம், நூல்வெளியீடு உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் இணைய வழியில் நடைபெறும்.ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும். 17-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கும், 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கும் இணையவழி நிகழ்வுகள் தொடங்கும்.

செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சமூகநீதி சார்ந்த ஒரு தலைப்பில் வல்லுனர்கள் உரையாற்றுவார்கள். மார்க்சிய, பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர் வே.ஆனைமுத்து, தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, முன்னாள் மத்திய அமைச்சர் மா.சுதர்சன நாச்சியப்பன், பா.ம.க. அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், பா.ம.க. புதுவை மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவர் வழக்கறிஞர் சா.துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க.வேலு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் காசி விஸ்வநாதன், பா.ம.க. பொருளாளர் திலகபாமா, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ச.கு.கார்வேந்தன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மருத்துவர்.இரா. கோவிந்தசாமி, பா.ம.க. அமைப்பு செயலாளர் மீ.கா. செல்வக்குமார், ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி கி.தனவேல், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் பேராசிரியர் ச.சிவப்பிரகாசம், தமிழக முற்போக்குக் கட்சித் தலைவர் வழக்கறிஞர் கா.சக்திவேல், தமிழ் படைப்பாளிகள் பேரியக்கத்தின் தலைவர் கவிஞர் வ.ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்று சமூகநீதி குறித்து அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சிறப்புரையாற்றுவார்கள்.

செப்டம்பர் 17&ஆம் தேதி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து சமூகநீதி வரலாறு குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய,‘‘சுக்கா…. மிளகா…. சமூகநீதி?’’ நூல் வெளியிடப்படும்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் www.pmkofficial.com/SJW2020Register என்ற இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிகளை www.pmkofficial.com/SJW2020Zoom என்ற இணைப்பை நேரடியாக சொடுக்கியோ, Zoom செயலியில் ID: 812 6392 1196 Password: 12345 உள்ளீடு செய்தோ காணலாம்.

www.pmkofficial.com/SJW2020Live என்ற இணைப்பில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண முடியும். அனைவரும் சமூகநீதி வார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சமூகநீதி குறித்து விழிப்புணர்வடையும்படி கேட்டுக் கொள்கிறோம்.


Share

Related posts

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு?

Udhaya Baskar

இந்தியாவில் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம்! பிரதமர் மோடி

Udhaya Baskar

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்சியான செய்தி

Admin

2021 புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வை வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர்

Admin

தமிழகம்-பொது பொக்குவரத்துக்கு அனுமதி, இபாஸ் ரத்து

Udhaya Baskar

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும்: முதல்வர் பழனிசாமி

Admin

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா?

Admin

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

மேலும் ஒரு மாணவி தற்கொலை: நீட் தேர்வை ரத்து செய்வது தான் தீர்வு! – இராமதாசு

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

சிவில் சர்வீஸ் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு?

Admin

Leave a Comment