மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Share

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளின் வீடுகள் முன் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்கள்.

மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சென்னையில் உள்ள அவரது இல்லத்தின் முன் மதுவிலக்குக்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அறப்போராட்டம் நடத்தினார்.

இதே போல் சென்னையின் பிற பகுதிகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் பா.ம.க.வினர் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.


Share

Related posts

கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

Admin

தங்கம் விலை ரூ.248 குறைந்தது

Udhaya Baskar

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா?

Udhaya Baskar

சென்னைதான் எனக்குப் பிடிச்ச ஊரு ! சிஎஸ்கே வீரர் புகழாரம் !

Udhaya Baskar

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Admin

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Udhaya Baskar

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Udhaya Baskar

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பு

Admin

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 மாதம் வரை அந்த எதிர்ப்பு சக்தி இருக்கும்

Admin

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

Udhaya Baskar

Leave a Comment